ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவின் சதிவலை வேலையா? – 1

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னணியிலுள்ள சில முக்கியமான கேள்விகளின் விடை தெரிந்தால், பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்!

கேள்விகள்:

1. உச்ச நீதி மன்றம் 3 வருடங்கள் முன்பே தடை விதித்தும், திடீரென இப்போது அது நடத்தப்பட இந்த அளவுக்குப் பெரிய போராட்டம் நடத்தப்படுவதன் பின்னணி என்ன?

2. ஜல்லிக்கட்டு சம்பந்தமான உண்மைகளை ஏன் எந்த வழக்கறிஞரும் உச்ச நீதிமன்றம் முன்பு கொண்டு செல்லவில்லை?

Advertisements

#1 திடீரென இப்போது  இந்த அளவுக்குப் பெரிய போராட்டம் நடத்தப்படுவதன் பின்னணி என்ன?

விரிவான விடை:

திடீரென சென்னையின் கடற்கரையில் இத்தனைப் பெரிய கூட்டம் சேர வேண்டும் என்றால், பல பகுதிகளிலிருந்து மக்கள் வருதல் அவசியம்.

மெரினா கடற்கரையின் ஒரு மூலையில்தான் தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகம் இருக்கிறது.

ஆக, காவல் துறை அறியாமல் இந்தக் கூட்டம் வந்திருக்க வாய்ப்பில்லை. காவல் துறை அறிந்தே இந்தக் கூட்டம் சேர்ந்தது என்றால், அக்கூட்டம் அங்கு குமிய காவல்துறையின் மறைமுக ஆசி உள்ளது என்றே பொருள்.

காவல்துறை தற்போது முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் உள்ளது.

ஓ பி எஸ் சசிகலா சொற்படி கேட்டு நடக்கிறார்.

கூட்டம் கூடுவதால் சசிகலா மற்றும் ஓ பி எஸ் ஆகியோருக்கு அரசியல் ஆதாயம் உண்டு. இல்லாவிட்டால், அது சேர அனுமதிக்கப்பட்டிருக்காது.

இப்படி ஒரு கூட்டம் சேர்ந்து விடாப்பிடியாக ஜல்லிக்கட்டு உத்திரவு பிறப்பித்தே ஆக வேண்டுமென்ற நெருக்கடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு விதித்துள்ளது.

இதனால், சசிகலா எந்த வித உயிலும் இல்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து பங்களாவில் தங்கி, கட்சியைக் கைபற்றும் முயற்சி மக்களுக்கு மறக்கடிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மிகவும் அதிகப்பணம் வாங்கும், அல்லது மத்திய அரசால் தடை செய்யப்ப  தன்னார்வுக் குழுக்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்கிறார்கள். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தான்.  எந்த வரும்படியும் இல்லாமல் இவர்களுக்கு மிருகங்கள் மீது இந்த அளவுக்கு கரிசனம் வரக் காரணம் என்ன?

அதெப்படி டூப்பு எனக் கேட்போர் முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய காட்ஜு சொன்னதைப் படிக்கலாம்.

ஸப் ஜூடீஸி [sub judice] என்பது ஒரு வழக்கை ஜூரர்கள் [மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும்போது நீதிபதிக்கு உதவி, மக்கள் சார்பான தார்ப்பை வழங்குபவர்கள்] விசாரணையில் கலந்துகொள்ளும்போது அவர்களது மனதை விசாரிக்கப்படும் வழக்குபற்றிய கருத்தில் பாதிக்கும் செய்திகள் வெளியிடாதிருத்தலுக்கான சட்ட நடை முறை. அந்த பழக்கம் இந்தியாவில் இல்லவே இல்லை. மேலு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கைச் செய்திகளால் பாதிப்படையக்கூடியவர்கள் அல்ல. ஆக யாரெல்லாம் ஸப் ஜுடீஸீ என்ற சொற்றொடொரைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் எல்லோரும் பொய் பேசும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்.

ஜல்லிக்கட்டு உடனே வேண்டுமென மத்திய அரசுக்கு நெருக்கடி அளிப்பதால், சசிகலாவின் அரசியல் செல்வாக்கு பற்றி மத்திய அரசு சற்றெ மிரண்டு உள்ளது. 

சசிகலாவின் அரசியல் ஜாலவித்தைகளை மத்திய அரசு ஆராய்கிறது என்ற ரிப்போர்ட் இதே கட்டுரையாளரால் தீட்டப்பட்டவுடன், அது நேரம்வரை அடுத்த முதல்வர் சசிகலாதான் எனப் பல்லாண்டு பாடியவர்களின் வாய் அடைபட்டது.

மத்திய அரசு ஜெயலலிதா உயில் விஷயத்தில் ஆராய்ச்சி நடத்தினால், சிறை செல்லும் அபாயம் கூட சசிகலாவுக்கு இருந்தது, ஏன் இன்னமும் இருக்கிறது!

ஜல்லிக்கட்டு என்ற ஜுஜூபி விஷயத்தையே மத்திய அரசால் சமாளிக்க முடியாத போது, பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகக் கிளை கிள்ளுக்கீரை ஆகியது. அப்படிச் செய்யக் கூடிய ஒரே நபர் நடராஜன்!

சசிகலா தி மு க தலைவர் கருணாநிதியின் கைப்பாவை என மேற்படி கட்டுரையில் 4 வருடங்களாக வெளிவந்த தகவல்கள் உள்ளடங்கி உள்ளன.

தற்போது கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியாது, பதவி ஏற்க அவரது உடல் நிலை அனுமதிக்காது.

ஸ்டாலினுக்கு சசிகலா சூட்சுமம் எந்த அளவுக்குத் தெரியும் என்பதில் தெளிவில்லை.

ஆனால், இந்த விஷயம் மொத்தமும் ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்காது என நினைக்க இடமே இல்லை.

ஆக, சசிகலா தி மு க பக்கம் போக முடியாது.

ஆக, தி மு க வின் கைப்பாவையாக இருந்த சசிகலா, தனக்கு வரக்கூடிய முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள, ஜல்லிக்கட்டுப் போராட்டம் வாயிலாக, மத்திய அரசை ஒரு புறம் மிரட்டி, தனது கட்டைவிரலின் கீழ் இயங்கும் அ இ அ தி மு க சட்ட மன்ற உறுப்பினர்கள் பெரிய கோரிக்கைகளை வைக்காமல் இருக்கச் செய்த “சித்து வேலை” தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என நினைக்க நிறையவே நியாயம் உள்ளது!

இதைச் செய்வதால், மத்திய அரசு மிரண்டு, சசிகலா சொற்படி பா ஜ க வின் தமிழகக் கிளை இயங்குமா? மத்தியில் அரசியல் விஷயத்தில் மிகவும் பலமான நிலையில் உள்ள பாரதப் பிரதமர் மோடி, இது போன்ற மகுடி வாசிப்புக்கெல்லாம் மயங்கும் நாதியற்ற நாகமல்ல என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடந்த போது, மோடி வந்து சென்ற பிறகு, அடக்க நேரத்தில் ராஹுல் காந்தி மலர் வளையம் வைக்கும் அதே நேரத்தில் நடராஜனும் இறுதி மரியாதை செலுத்தியதைப் பலர் மறந்து இருக்கலாம்.

அதன் சூட்சுமம் என்ன? தி மு க வின் கதவுகள் சாத்தப்பட்ட பின்பு, பா ஜ க விடம் பேரம் படியாவிட்டால், அ இ அ தி மு க ஆட்சியை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ்  ஆதரவுடன் காப்பாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?

காங்கிரஸ் தமிழகத்தில் காணாங்கிரஸ் ஆகி பல தசாப்தங்கள் ஆகி விட்டன.

பா ஜ க வுக்கு தமிழகத்தில் பலமில்லை.

தி மு க வின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

ஆக, நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற கணக்கில் அ இ அ தி மு க ஆட்சியைத் தொடர நடராஜன் வகுத்துள்ள வியூகம் தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான மறைமுக ஆதரவா?

#2 ஜல்லிக்கட்டு சம்பந்தமான உண்மைகளை ஏன் எந்த வழக்கறிஞரும் உச்ச நீதிமன்றம் முன்பு கொண்டு செல்லவில்லை?

ஜல்லிக்கட்டு விளையாட்டால் மிருகங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற உண்மை உச்ச நீதி மன்றம் முன்பு வைக்கப்படவே இல்லை.

முன்பு காளைகள் உழவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்தன.

காளைகள் உழவர்களின் நண்பர்களாகக் காணப்பட்டு, அவற்றைத் தழுவி விளையாடும் சடங்கின் பெயர் தான் ஜல்லிக்கட்டு.

இன்று அந்த இடத்தை ட்ராக்டர்கள் பிடித்ததால், பசுமாடுகள் அடிமாடுகளாகத் துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன.

பசுவின் சாணம் உலகிலேயே சிறந்த உரம். பசு மாடுகள் இருந்தால், அந்த உரத்தின் மதிப்பு என்றேனும் மக்களது கவனத்திற்கு வந்து கொள்ளை லாபம் அடிக்கும் ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளின் பிழைப்பில் என்றேனும் மண் விழ வாய்ப்புண்டு. அந்த உரத்தால் உடல் உபாதை அபாயங்கள் கிடையாது. ஆனால் ரசாயன உரத்தால் பூமி தரிசாகிறது. இந்த உண்மை தெரியாத விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஒரு சாதாரண உண்மை வெளிபட்டு, ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் கிடைக்கும் அடாவடி லாபம் வருங்காலத்தில் மறையும் வாய்ப்புண்டு. உலகின் பல பகுதுகளில் “பசுமை” “இயற்கை உரம்” என்ற கோஷங்கள் எழும்பி உள்ளன. அது தமிழகத்தில் தழைத்தோங்க பயன்படக்கூடியவை பசு மாடுகள், காலைகள். இதை இல்லாமல் செய்து விட்டால், ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளின் அதைத் தடுக்க, உள்ளூர் பசு மாடுகல் தமிழகத்தில் சுத்தமாக இல்லாமல் செய்ய முற்படுவார்கள் என எண்ணத் தோன்றுகிறது. அதைத் தடுக்க ஒரே வழி, காளைகள் இல்லாமல் செய்வது. ஜல்லிக்கட்டு இருந்தால், காளைகள் இருந்தே தீரும். ஜல்லிக்கட்டை ஒழித்தால், அனைத்து மாடுகளையும் இறைச்சிக்காக விற்று விடுவார்கள்.

மேலும் பசுவின் கழிவான கோமியம் உலகில் தலைசிறந்த பூச்சிக்கொல்லி. தற்போது விற்கப்படும் ரசாயன மருந்துகளால் பல உடல் உபாதைகள் உருவாகின்றன.

இதனால் மருந்துக் கம்பெனிகளுக்கும் லாபம்.

பாலுக்காக, வெளி நாட்டுப் பசுக்கள் வரவழைக்கப்படும்.

அவை கொழுப்பான பால் கறக்க இறந்த மீன், பன்னி, ஆடு, கோழி, பசு, காளை ஆகியவற்றின் எலும்புத் தூள், மட்டுத்தீவனமாகப்பட்டு விற்கப்படுகின்றன.

பசுவைத் தின்பது ஹிந்துக்களைப் பொறுத்தவரைப் பாபம்.

பன்றியை உண்பது இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட விஷயம்.

இந்த ரசாபாசமான விஷயத்தை மறைக்க “சைவம், அசைவம்” என்ற சற்சையைக் கிளப்பி மேலும் குழப்பங்களை உருவாக்க, சில அடிப்படைவாதம் புரியும் ஹிந்து-இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் தூண்டிவிடப்படும்.

உள்ளூர் பசுக்கள் இல்லாமல், அசைவப்பசுக்களின் பால் மட்டுமே கிடைக்க அது வழி வகுக்கும். அதன் சாணத்திற்கும் கோமியத்திற்கும் உள்ளூர் பசுக்கழிவிலுள்ள அளவுக்கு “உரத்தன்மையும், கிருமி ஒழிப்புத் திறனும்” இருக்காது என ஒரு கருத்து நிலவுகிறது.

மிஞ்சப்போவது குழப்பமும், உர, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் லாபமும், ஆங்கில மருந்துக் கம்பெனிகளின் அடாவடி வியாபாரக் குயுக்திகலும் மட்டுமே.

இந்த உண்மைகளை மறைக்கும் பொருட்டு எத்தனை வழக்கறிஞர்களுக்கு யார் யார் எப்போதெல்லாம், எப்படி எல்லாம் பணம் கொடுத்தனர் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு விடை கிடைப்பது கஷ்டம். கிடைத்தாலும், “அது தொழில் சம்பந்தமான விஷயம்” எனப் பூசி மொழுகி விடுவார்கள்.

போதாக்குறைக்கு ஒரு சிலரை ஏவிவிட்டு, பொய் வீடியோக்களைத் தயாரித்து ஜல்லிக்கட்டு பற்றிய மிருகக் கொடுமைக் கட்டுக்கதைகளைப் புனைய முயற்சிகள் நடக்கலாம். அவற்றையும் முறியடிப்பது கஷ்டமான விஷயம்தான்.

இதன் காரணமாகத் தான் உண்மைகள் உச்ச நீதிமன்றத்திடமிருந்து மறைக்கப்பட்டன என்று நம்ப நிறையவே இடமிருக்கிறது.

இது ஆரம்பம் தான். இன்னும் நிறைய நாறும் உண்மைகள் உள்ளன. அவை நாளை!