தமிழக அரசியல்வாதிகளுள் யாருக்கும் வெட்கமில்லை!

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை

மேலே உள்ளவை, 1975ல் வெளிவந்தயாருக்கும் வெட்கமில்லைஎன்ற படத்தில் ஒலித்த பாடலின் பல்லவி.[1] அதில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஜெயலலிதா. கதை, வசனம், டைரக்ஷன்துக்ளக் ஆசிரியர் சோ.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்னும் முழுமையாக 3 மாதங்கள் முடியவில்லை, அவர் கட்டிக்காத்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [அ இ அ தி மு க], கலகத்திலும் குழப்பங்களிலும் சிக்கி, கிட்டத்தட்டக் கழிவுப் பொருளான நிலையை அடைந்து, அதன் பெயர் “லகலகலகலக” வென ரிப்பேராகிவிட்டது.

விரைவில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் வரும் என ஒரு அளவுக்கு நம்பும்படியான ஆரூடத்தை ஊடகங்கள் சொல்கின்றன.

கைவசம் 130 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை வைத்துள்ளதாக ஜெயலலிதாவின் “உடன்பிறவா சகோதரி” சசிகலா சொல்லி வருகிறார்.

சட்ட மன்ற உறுப்பினர்களை ஒரு லாட்ஜில் பிணைக்கைதிகளாக சசிகலா வைத்துள்ளார். அவர்களை விடுவித்து, சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்த பின்பு சட்டமன்றத்தில் யாரிடம் பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தல் அவசியம். அதை என்னால் செய்ய முடியும்,”, என்ற வாதத்தை முதல்வர் ஓ பி எஸ் முன்வைத்துள்ளார்.

“பிணைக்கைதிகளாக இருப்பதாகச் சொல்லப்படும் எம் எல் ஏக்களின் உண்மை நிலையை உள்ளூர் காவல்துறை உதவியுடன் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை விடுவிக்காவிடில் மத்திய அரசின் படைகள் களமிறங்கும்,” என ஆளுனர் ராவ் அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை எல்லாம் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்பட்டுத்த பா ஜ க செய்யும் சூழ்ச்சி, என சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசுவோர் சொல்கிறார்கள்.

உண்மை கண்டறியப்பட வேண்டும். தேவை என்றால் ஜனாதிபதி ஆட்சி வரட்டும் என தமிழகம் முழுதும் ஆதரவுக் குரல்களை கேட்க முடிகிறது.

இக்காரணங்களால், இன்று சசிகலா, “சதிகலாஎன ஏசப்படுகிறார். சட்ட மன்ற உறுப்பினர்களை அவர் சிறைபிடித்து வைத்திருப்பதை “கூத்து” எனும் சிலர், அவரைசகதிகலாஎன்றும் பழிக்கிறார்கள்.

“எம் எல் ஏ க்கள் எங்கள் பாதுகாப்பில், சொந்த விருப்பத்தின் பெயரில் தான் உள்ளார்கள்,” என சசிகலாக் குழு வாதிடுகிறது.

அது உண்மை என்றால், அவர்களை அடைத்து வைக்க என்ன தேவை உள்ளது? நிருபர்கள் கூட மஹாபலிபுறம் அருகே உள்ள விடுதிக்குச் செல்வதை ரவுடிகளை வைத்துத் தடுக்க என்ன காரணம் என்ற அடிப்படையான கேள்விகளுக்கு சசிகலா தரப்பினர் விடை அளிக்க மறுக்கின்றனர்.

தன் பங்கிற்கு சசிகலா ஆளுனரை பகிரங்கமாக மிரட்டத் துவங்கி விட்டார். “பொறுமை காப்போம். பின்பு, அதன் எல்லை மீறப்படும்படி ராஜ் பவன் நடந்து கொண்டால், செய்ய வேண்டியதைச் செய்யத் தயங்க மாட்டோம்,” என சசிகலா பேட்டி அளித்துள்ளார்.

சமீப காலம் வரை, சசிகலாவுக்குக் காவடி எடுத்த கல்வி அமைச்சர் பாண்டியராஜன், ஓ பி எஸ் அணியில் சேர்ந்து, சசிகாலாவைப் பழிக்கத் துவங்கி விட்டார்.

இக்காரணங்களால், “துரோகி” என்ற பட்டத்தை சசிகலாவும், காபந்து முதல்வர் எனச் சொல்லப்படும் [அரசியல் சட்டப்படி அப்படி ஒரு பதவி இல்லை] ஓ பி எஸ் ஸும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு வருகிறார்கள்.

அ இ அ தி மு க வின் அவைத் தலைவர் பதவியை – மதுசூதனனிடமிருந்து சசிகலா பறித்து அவரைக் கட்சியை விட்டு நீக்கினார். அதே பதில் மரியதையை  தானும் செய்ததாக மதுசூதனன் அறிவித்தார்.

“எம் எல் ஏக்கள் அதிக அளவில் உள்ள அணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறதே! ஆகையால், ஆளுனர் ராவ் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பதில் தாமதம் காட்டுவதை சட்டவிரோதமான செயல்,” என டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்றோர் சொல்லி வருகிறார்கள்.

பொதுவாக, ஸ்வாமி அ இ அ தி மு க வின் எதிரி எனச் சித்தரிக்கப்படுபவர்.

1992 முதல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு சாவு மணி அடிப்பேன் எனக் கங்கணம் கட்டி தமிழகத்தில் அவர் செயல்பட ஆரம்பித்தார். அது பலிக்கவில்லை.

ஸ்வாமி அ இ அ தி மு க ஆதரவுடன் 1998-இல் மதுரைத் தொகுதியிலிருந்து வென்று மக்களவைக்குச் சென்றார் என்பதை பலர் மறந்துள்ளனர்.

ஸ்வாமியின் அரசியல் உறவுகளெல்லாவற்றையுமே அவரது நண்பர் சந்திரஸ்வாமி என்ற கபட சாமியார் தனது ஆதரவாளர்களின் தயவில் ஏற்படுத்தி உள்ளார் என்பதை பலர் மறந்திருக்கலாம். சந்திரஸ்வாமியின் பிரதான சீடர்களுள் ஒருவர் அப்போலோ மருத்துவ மனையின் உரிமையாளர் டாக்டர் பிரதாப் ரெட்டி. ஜெயலலிதா மர்மமான கடைசி மூச்சை அப்போலோவில் விட்டார் எனச் செய்திகள் சொல்கிறன. அப்போலோ மருத்துவ மனையில் ஜெயல்லிதாவைச் சந்திக்க யாரையும் அனுமதிக்காத சசிகலாவுக்கும் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கும் “கொள்கை அடிப்படை உறவு” இருப்பதை எல்லோருமே எளிதில் யூகிக்கலாம். ஜெயலலிதாவின் மறைவில் அப்போலோவின் உரிமையாளர்களுக்குப் பங்குண்டு என நிரூபணமாவதை ஸ்வாமி விரும்ப வாய்ப்பே இல்லை. ஆகையால், பிரதாப் ரெட்டிக்குச் சாதகமா ஸ்வாமி செயலபடுவதில் எந்த வித ஆச்சிர்யமும் இல்லை. அதன் ஒரு பகுதியாக, சசிகலாவுக்கு முதல்வர் பதவி அளித்தே ஆக வேண்டுமென ஸ்வாமி சொல்வதில் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை. இதற்காக அவர் சசிகலா குழுவிடம் பெட்டி நிறையப் பணம் பெற்றார் என்றெல்லாம் சொல்வது பிதற்றல்.

இன்று தமிழகத்தின் அவல நிலையின் சுருக்கம்:

75 நாட்கள் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவை, அவர் கவனித்து வந்த இலாக்காக்களின் செயல்பாட்டை மேற்பார்வை இட நியமிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் என்ற தற்போதைய முதல்வருக்கு – நோய்வாய்ப் பட்டிருந்த தனது தலைவியை ஒரு முறை கூட சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

“ஜெயலலிதாவின் விருப்பத்திற்கேற்பத் தான் அவ்வாறு நிகழ்ந்தது,” என்பது சசிகலா தலைமை தாங்குவதாகத் தென்படும் கும்பல் வாதிடுகிறது.

இந்த வாதம் நம்பும்படியாக இல்லை.

செப்டம்பர் 27 2014 அன்று ஜெயலலிதாவுக்கு பெங்களூரின் பார்ப்பன அக்கிரஹாரா என்ற இடத்தில் அமைந்திருந்த விசேஷ நீதிமன்றத்தில், ஜான் மைக்கேல் டா குந்ஹா என்ற நீதிபதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை  வழங்கினார். சிறையில் ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, அவர் தனது தோழி சசிகலாவைக் கூடச் சந்திக்கவில்லை.

அவர் சிறையில் இருந்த காலத்தில், முதல்வர் பதவியை ஓ பி எஸ் வகித்தார். சிறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்த பின்பு, மீண்டும் முதல்மைச்சராகும் வரை ஓ பி எஸ் முதல்வர் பதவியில் தொடர்ந்தார். இது ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் தான் நடந்தது. அக்காலகட்டத்தில் ஓ பி எஸ் அடிக்கடி ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தின் வேதா நிலையம் பங்களாவில் சந்தித்ததாகச் செய்திகள் சொல்கின்றன.

ஜெயலலிதாவின் வசமிருந்த இலாக்காக்களை – அப்போலோ மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது – ஓ பி எஸ் கவனித்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார். இது ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் நிகழ்ந்ததாக ஆளுனர் வித்யாசாகர் ராவ் கூறினார். நிதி அமைச்சராக ஓ பி எஸ் தொடர்ந்தார்.

ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதிக்கப் படாதவர்கள் பட்டியலுள் ஆளுனர் ராவ், ஓ பி எஸ், மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி, தமிழக எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ராம் மோஹன் ராவ், என ஏராளமானோரின் பெயர்கள் உள்ளன.

இந்த நிலையில் செப்டம்பர் 22 2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை அவரது உதவியாளர்கள் ராமலிங்கம், வெங்கட ரமணன் மற்றும் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோஹன் ராவ் செப்டம்பர் 27 2016 அன்று காவிரி நடுவர் மன்றம் பற்றி அளவளாவியதாக தமிழக அரசுச் செய்திக் குறிப்புக் கூறுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி அன்று ஆளுனர் ராவுக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 22 அன்று ராவ் ஜெயலலிதாவைச் சந்தித்தார் என சசிகலாவுக்கு ஆதரவாக பத்திரிக்கை நிருபர்களிடம் பேசிய டாக்டர்கள் பீலே, பாபு அப்ரஹாம் மற்றும் பாலாஜி ஆகியோர் சில தினங்கள் முன்பு சொன்னார்கள்.

அவர்கள் சொல்லும் சில மணி நேரங்கள் முன்பு வெங்கடரமணனும், ராமலிங்கமும் வேறு இலாக்காக்களுக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் இது வரை விசாரிக்கப்படவில்லை!

இந்த நிலையில் ராம சீதா என்ற பெண் மருத்துவர் செப்டம்பர் 22 2016 அன்று கொண்டுவரப்பட்டது ஜெயலலிதாவின் சடலம் தான் என்று வாக்குமூலம் அளித்து வருகிறார்.

சசிகலா போயஸ் தோட்ட வீட்டில் தங்க அனுமதி இருப்பதாக எந்த வித ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை.

ஓ பி எஸ் தி மு க வின் சொற்படி செயல்படுகிறார் என சசிகலா குற்றம் சாட்டுகிறார். ஆனால் சசிகலாவே தி மு க தலைவர் கலைஞரின் கைப்பாவை என்ற செய்தி ஊடகங்களில் 5 வருடங்களாக வலம் வந்தவண்ணம் உள்ளது.

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா  பற்றி வாய் திறவாத ஓ பி எஸ், திடீரென வீரம் வந்தவர் போலவும், சசிகலாவின் சதியை உணர்ந்தவர் போலவும் சித்தரிக்கப்படுவது நம்பும்படியாக இல்லை.

தான் கட்டாயப்படுத்தி ராஜினாமாக் கடிதத்தில் கையொப்பமிடப் பணிக்கப்பட்டதாக்க் கூறும் ஓ பி எஸ், காவல்துறையில் புகார் கொடுத்து, இ பி கோ 503 இன் கீழ் சசிகலாவை கைது செய்யும்படியே காவல்துறையைப் பணித்திருக்கலாம். இதுவும் நடக்கவில்லை.

ஸ்டாலின் அ இ அ தி மு க சார்பில் முதலமைச்சராக உள்ள ஓ பி எஸ் ஸுக்கு உதவும் ரீதியில் செயல்படுவது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

பா ஜ க இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறது எனச் சொல்வோர், தமிழனின் தன்மானம் பாதிக்கப்படுகிறது, ஆரிய மாயை என்றெல்லாம் பேசுகிறார்கள்.

பா ஜ க இதில் பிற கட்சிகளைப் போல அரசியல் ஆதாயம் தேடுகிறது.

ஜனாதிபதி ஆட்சி என்றால் அதன் பொருள் பா ஜ க ஆட்சி தான். அதுவே நிகழ்ந்தால், வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள் பட்டியலில் எல்லா தமிழக அரசியல்வாதிகள் இடம்பெற்ற உணர்வு ஏற்படும்.

இறந்த ஜெயலலிதா இனி திரும்பி வரப்போவதில்லை. மேல் உலகில் கீழ்க்காணும் பாடலை அவர் முணுமுணுக்கிறாரோ என்னவோ!

[1]

ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

இதிலே அவளுக்கு வெட்கமென்ன

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்

நீ சொன்னால் காவியம்

ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா

அத்தன பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே

அத்திப் பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை

மூடர்கள் ஏற்றிய குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்

முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்

சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்

மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா

எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்

இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை

அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

இப்போது இந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

10 thoughts on “தமிழக அரசியல்வாதிகளுள் யாருக்கும் வெட்கமில்லை!”

  1. Dear Sir,
    Your piece on ‘Yaarukkum Vetkamillai” was amazing. Panneerselvam would not have revealed the Apollo Hospital imbroglio, if Sasikala allowed him to remain as the CM. He opened out only when he realised that Sasikala is likely to occupy the chair at his expense. As you have rightly pointed out, why did he not file an FIR under sec-503 and imprisoned Sasikala? He too preferred to take a decision only after the climax, which made him sure that he would be ousted at any cost. When Sasikala started violating the party constitution, he could have admonished her with a strict warning that she was not even a member of the party. Paneer says he was forced and not threatened. What major difference does he differentiate between the two? How come he could be bold enough within 47 hours after putting his papers. Could not he voiced his opposition vociferously immediately, instead of waiting for two days. He also says that he did not invite press, which is unbelievable. When he could not tolerate Sasikala asking him to sitting in the opposite row, the time he took to open out, would certainly create suspicion in the minds of people. Luckily, for him, people are accepting him, because of their total disliking of Sasikala. Moreover, Deepa’s non-entry at this stage had also helped him.

    Regarding maverick Subramanian Swamy, it was not surprising to know his links with Dr Reddy, Chairman of Apollo. It is revealing to note that Reddy is close to godman Chandraswamy. It is an open secret that Swamy, Narasimha Rao and a few others were close to Dr Chandrasamy. Moreover, Dr Reddy’s daughter Anita Reddy is reportedly close to Maran brothers. It is quite natural for Swamy to bail out Dr Pratap and Sasikala, considering their relationship. You perhaps right in stating that Swamy would not prefer any name for Pratap Reddy. Yes, Swamy won the 1998 Lok Sabha poll in coalition with the AIADMK-BJP. Jaya’s magic worked. But, in the 1999 poll, Swamy could not repeat his victory from Madurai constituency, despite support from Jaya and Sonia. The stormy-petrel Swamy now says being the single largest party with 120 MLAs roughly, Sasikala should be permitted to rule the state. However, the same Swamy said in 2001, after Jaya was briefly out of tenure, that the Governor should invite the opposition to prove their strength, even though the DMK then were only with roughly 34 MLAs. People will not forget that it is Chandralekha who introduced Sasikala to Jayalalithaa. Interestingly, Chandralekha is the trusted confidant of Swamy. It is also being reported by Dinamalar daily that Swamy is promoting the cause of Sasikala through Rajnath Singh. We are hoping against hope that disproportionate assets case will unseat Sasikala, more than of anything else.

    Thanks and regards,
    Venu

    Like

  2. தமிழில் பேசும் போதும் எழுதும் போதும் தங்கு தடையின்றிப் பிழைகளுடன் பேசுவதும் எழுதுவதும் ஜகஜம். இதில் சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர், ஊடகவியலாளர்கள் என எவரும் விதி விலக்கிலை. எழுதும் போது ன- வுக்கு பதில் ண- வும் ல- வுக்கு பதில் ள- வும் பலரும் பிழையாக எழுதுவதைப் பார்க்க முடிகிறது. மைக் பிடித்தால் இரண்டு நிமிடம் பேசுபவர்கள் கூட அவர்கல் என்று உச்சரிப்பதைக் கேட்க முடியும். அந்த வகையில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது பார்ப்பன அக்கிரகாரா என்றே பல பத்திரிகைகளும் எழுதின, தொலைக் காட்சிகளிலும் இப்படியே எல்லோரும் சொல்லக் கேட்க முடிந்தது.

    அது பார்ப்பன அக்கிரகாரா இல்லை. பரப்பன அக்கிரகாரா. ப, ர இரண்டு எழுத்துக்களில் ஒரு வார்த்தை கண்ணில் பட்டாலே தமிழனுக்கு அது பார்ப்பன என்றே படுகிறது.

    Like

    1. அக்கிரஹாரம் என்பது பார்ப்பனர்கள் வசிக்கும் இடம் என அனைவரும் அறிவர்.

      பெங்களூரில் spelling Parappana என்றாலும், கன்னட மொழியில் அதன் உச்சரிப்பு “பார்ப்பன” என்பதே என அம்மொழியில் தேர்ச்சி உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

      தவிர, நான் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவன்.

      இந்தச் சின்ன விஷயத்திற்கு இவ்வளவு வெகுண்டு எழுதியுள்ளீர்களே என நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.

      Like

  3. Dear Sir,

    Yes sir, it was a small issue. The writer need not get offended. In fact, addressing Brahmins as “Pappans itself is de-meaning. They should be addressed as “Brahmin or “Brahmanarkal”. Being, a Brahmin, this is a request from me.
    Your predictions on political issues are perfect to the core and I would be pleased, if you are in a position to expose the maverick Subramanian Swamy, as he is dodging the press without keeping any mind-boggling evidence at his disposal. I understand it is not possible for Thulak too, considering Gurumurthy’s equation with Swamy. Even, I presume the Late Cho had a soft corner on him, despite his innumerable bungling on various issues. However, the people of Tamil Nadu have understood his nefarious designs, if one views his shattering defeat in the 1999 Lok Sabha poll.

    Thanks for your wonderful coverage so far. Looking forward to reading more of your articles/features.
    Regards,
    Venu

    Like

    1. The issue was of the spelling “Parappana” which I thought should be Paarpana as the second word is Agrahara, meaning Brahmin Street. But, that isn’t much anyway. Someone objected thinking the writer is a non-Brahmin. I am very much a Brahmin and carried no ill will while writing it thus.

      Like

  4. Dear Sir,

    Your predictions are very true. There is no iota of doubt about it.
    Since Deepa has joined Paneerselvam, is there any possibility of erosion from the campus of Sasikala-Ezhapadi Palanisamy.

    The DMK will reap rich dividends now in the chaos.

    Even though the situation is more or less similar to 1988 after the demise of MGR on Dec 24, 1987, I presume MLAs, let alone the Ministers, would not like to forfeit their chairs for another four-and-a-half year. But Stalin definitely would attempt to upset the applecart of either Paneerselvam or Ezhapadi Palanisamy, despite Duraimurugan’s gimmick in the assembly. Knowing full well about the DMK, will they keep up the promise, if one goes through how Karunanidhi deceived the then incumbent Janaki in 1988 by withdrawing his party’s support. When Subbuluxmi Jagadeesan aired similar views of Duraimurugan, Stalin silenced her by invoking party decorum. Now, suddenly they are activing as good Samaritans. Stalin says the DMK never misused the Article 356. Have the people forgotten, how Karunanidhi insisted on Indira Gandhi to dismiss the MGR Government in early 1980 after the Congress(I) captured power. The people still remember Rajamannar Committee and how Karunanidhi virtually begged before Sarkaria Commission. Cho boldly exposed Shakti Pipes and Veeranam scandals in Thuglak.. Peter Alphonse once said, DMK is known for its scientific corruption. When Stalin speaks about probity in public life, let him not forget that some benami institutions are functioning under his name and elimination of some of his trusted lieutenants happened, albeit owing to his insistence. Stalin is concerned about stability now, but was his party not the architect in ensuring defections from Vijayakant’s DMDK and earlier from the AIADMK from 2006 to early 2011.. Is Stalin not aware that Sasikala was a mole on Karunanidhi during the hey days of Jayalalithaa.

    Keep up your good work.

    Thanks and regards,
    Venu 

    Like

  5. Dear Sir,
    One cannot dream of Ezhapadi Palanisamy taking the mantle on his shoulder. If this is going to be our fate one cannot help it. It is a win-win situation for DMK ideally.
    Looking forward to your detailed coverage.
    Thanks and regards,
    Venu

    Like

Leave a comment