உளவுகாத்த கிளி – 13

“உங்களுக்கு நேரடியாப் பேசற பழக்கமுண்டா?”

“உண்டே!”

“அப்போ, அப்படியே பேசுவோமே! இந்த அளவுக்குச் சுழற்ற வேண்டியதில்லை. இது ஒரு காஷுவல் சந்திப்பு இல்ல. நீங்க எனக்காக…”

அவர் இடைமறித்தார்.

“என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் என்னை Bob ன்னு கூப்பிடுவாங்க. சர்ச்சுல எனக்கு வெச்ச பெயர் Robert Louis. ராபர்ட்ன்ற பெயர் பழங்காலத்துல சுருங்கினப்ப அது பாப் ஆச்சு…. இங்க்லீஷ்ல ராப் ன்னா கொள்ளை அடிக்கறதுன்னு அர்த்தம் … ங்கற காரணத்தால கூட அப்படி நடந்திருக்கலாம். உன்னோட காவல்துறை ஃப்ரென்ட்ஸ் – துர்லபாடின்ற பெயரை சுருக்கி துருன்னு கூப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். … ரொம்ப நேரடியாப் பேசறேனோ?”

“அடங்கொக்கா… மக்கா….”

“பொடாங்…. கொய்யால!”

சிரித்துக் கொண்டே நம்ம ஊர் தமிழில் பதில் சொன்னான்.

எனக்கு ஷாக்.

“இந்த அளவுக்கு நாங்க ஒற்றர் பணியில சித்து வேலை பண்ணக்கூடியவங்கன்னு காட்டினதால தான் நாங்க உலகத்துல பெரிய பகுதியை ஆள முடிஞ்சுது. நீங்களும் ஒண்ணும் கொறஞ்சவங்க இல்ல. காஷ்மீர்ல பாகிஸ்தான் செய்யற நாசவேலைக்கு – பழிக்குப் பழி வாங்க – பலூச்சிஸ்தான்ல உங்க ஆளுங்க புகுந்து விளையாடிகிட்டு இருக்காங்க. விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனோட கும்பல்ல, இறுதி நேரத்துல அவனைச் சுத்தி இருந்த ஆளுங்கள்ள உங்க நாட்டு ஒற்றன் முக்கியமானவன். அதோட விளைவா, 2009 ஜனவரியில இலங்கைப் படைத் தளபதி ஃபோன்ஸேக்கா, பிரபாகரன் இலங்கையிலேந்து தப்பிச்சிருக்கலாம்னு சொன்னான். அதிபர் தேர்தல்ல கோட் அடிச்சி, போர்க் குற்றவாளி ராஜபக்ஸ உபயத்துல 3 வருஷம் ஃபோன்ஸேக்கா ஜெயில்ல இருந்தான். அந்தப் பய இப்பக்கூட வெளி நாடுகளுக்குப் போக முடியாது. நாங்க ரொம்ப நாளா இந்த ஜிகினா வேலைகளைப் பண்ணறதால எங்க மெத்தட் ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட் மாதிரி தெரியிது. ஆக்ச்சுவலி, எல்லா விஷயத்துலயும் இன்டியன்ஸ் ஆர் காச்சிங் அப். நாங்க கண்டுபிடிச்ச விளையாட்டான கிரிக்கட்டையே எடுத்துக்க. 1983 ல, உங்க ஊரு டீம், கபில் தேவ் தலைமைல எங்க ஊருக்கு வந்து உலகக் கோப்பையை தட்டிகிட்டு போச்சு. இப்போ இருக்கறதுலேயே ஸ்ட்ராங்கான டீம்ல இந்தியா டாப்ல இருக்கு. கிரிக்கட்டோட கடவுளான சச்சின் யார்க்ஷைர் கவுன்ட்டி டீமுக்காக ஆடறப்ப, நா எல்லாம் லீட்ஸ் க்ரவுண்டுல நின்னு, விடாம விசிலடிச்சிரிக்கேன். உளவுத் துறைலயும் உங்க நாடு வர்ல்டு சாம்பியன் லெவலுக்கு வந்துரும். 2002ல குஜராத்ல நடந்த சம்பவங்கள்னால அந்த ஊர் ஸி எம் மோடிக்கு எங்க ஊருக்கு வர விசா இல்லன்னு இன்னமும் பாவலா பண்ணிகிட்டு இருக்கோம். ஆனா, எல்லா மேற்கத்திய நாடுகளோட தலைமைகளுக்கும். உண்மையில அவரை ரொம்பப் பிடிக்கும். அவரு பிரதமராகறப்ப எல்லா மேற்கத்திய நாடுகளும் அவருக்கு விழுந்து விழுந்து உபச்சாரம் பண்ணும்.”

“குஜராத்னு நீ திடீர்ன பேச்சை மாத்தின…”

“அதுக்கான காரணம் பில்கிஸ் அஷ்ரஃப் கான்.”

அதிர்ந்து போனேன்.

பில்கிஸ் காரணத்தால தான் நான் சாவித்ரியை விவாகரத்துப் பண்ண வேண்டி வந்தது. பில்கிஸ் கானுக்கும் அவ புருஷன் அஷ்ரஃபுக்கும் அடைக்கலம் குடுத்த காரணத்துனால சாவித்ரி உட்பட என்னோட வேட்டகத்து மனிஷங்க அவ்வளவு பேரும் தீக்கிரையானார்கள்.

அந்த வெள்ளைக்காரன் தொடர்ந்தான்.

“சாவித்ரியும் அவங்க பேரன்ட்ஸும் செத்தது ஹின்டூஸ் வெச்ச தீயினால இல்ல. குஜராத்ல மதக் கலவரங்களத் தூண்ட பாகிஸ்தான் ஒரு பெரிய கேம் ஆடினாங்க. மேலும், அந்தப் பொம்பள பேரு பில்கிஸ் கானே இல்ல. நிஜப் பெயர் ஜீனத் இப்ராஹிம் தரார். பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு ஸ்தாபனத்தில் இப்ப கர்னல் பதவில இருக்கற அதிகாரி. ஆனா, அதுக்கு எந்த ரெக்கார்டும் கிடையாது. அவளும், அவளோட கணவனா நடிச்ச அவளோட ஸுபீரியர் ஆஃபீஸர் அஷ்ரஃப் கான் ங்கற பெயர்ல சுத்தின இன்னொரு ஸ்பை – ஆலம்கீர் கான் பிஸஞ்சோ. இப்போ அவன் ப்ரிகேடியர் ராங்க் அதிகாரி …. அவனோட பெயரும் ரெக்கார்ட்ல கிடையாது …. ரெண்டு பேரும் இப்போ மாளத்தீவோட குடிமக்கள் வேஷத்துல – டெல்லியில ஏதோ பிஸினஸ் பண்ணறதாப் பொய் சொல்லிகிட்டு உளவு வேலை பார்க்கறாங்க.”

மனதுள் கொப்புளித்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கினேன்.

“ஏன் … எப்படி??”

“இந்த ரெண்டு பாகிஸ்தான் உளவாளிங்களும் பண்ணற நாச வேலை என்னன்னு …ஒரு நாள் சாவித்ரிக்கு அகஸ்மாத்தாப் புரிஞ்சு போச்சு. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினா. நீ என்ன வேலை செய்யறன்னு சாவித்ரிக்குத் தெரியாது. உன்கிட்ட மன்னிப்புக் கேட்டு, மறுபடியும் உன்னோட ஒண்ணு சேர முடிவு பண்ணி, ஒரு லெட்டர் எழுத ஆரம்பிச்சா. அந்த நேரத்துல பில்கிஸ் வீட்டுல இல்ல. கொஞ்சம் அஜாக்கிரதையா அதை டேபிள் மேல வெச்சு பாத்ரூம் போன நேரத்துல, பில்கிஸ் வீட்டுக்குள்ள வந்தா. அந்த லெட்டர் அவ கண்ணுல பட்டிரிச்சி. நீ என்ன வேலை பண்ணறன்னு உன் பொண்டாட்டிக்கு வேணும்னாத் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா, ஜீனத் ன்ற பில்கிஸுக்குத் தெரியும். ரெண்டு பேருமா ஒரு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சி சாவித்ரி, அவங்க பேரன்ட்ஸ் எல்லாரையும் unconscious ஆக்கினாங்க. கவனமா உன் வைஃப் எழுதின லெட்டரை தூக்கி தன்னோட ஹேன்ட் பேக்ல பில்கிஸ் வெச்சிகிட்டா. மற்ற எல்லா ருசுக்களையும் சுருட்டி இடுத்துகிட்டா. கொண்டு போக முடியாத ஆதாங்கள் மேல பேட்ரோலை ஊத்தினா. வீட்டுக்கு வெளியே வர்றப்ப, கிச்சன்ல சமையல் கியாஸைத் திறந்து விட்டு, பத்து நிமிஷத்துல வெடிக்கற ஒரு சின்ன டைம் பாம் உள்ள வெச்சிட்டு, சத்தம்போடாம காந்தி நகர் பக்கம், ஹின்டூஸ் வேஷத்துல போயிட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு வெறிபிடிச்ச ஒரு ஹின்டூ கும்பலுக்கு, உன் வைஃப் ஃபேமிலி முஸ்லிம்ஸ்க்கு அடைக்கலம் குடுத்த விஷயத்தை வத்திவெச்சிட்டாங்க. அந்தக் கும்பல், உன் வைஃப்“ஃபேமிலியை ‘தண்டிக்க’ அவங்க பங்களாவை நெருங்கறதுக்கும் அந்த டைம் பாம் வெடிக்கறதுக்கும் கரெக்டா இருந்தது. எரிய ஆரம்பிச்ச வீட்டுல இந்தப் பைத்தியக்கார கும்பலும் கொள்ளிக்கட்டைகளை எறிஞ்சிச்சி. அந்த ஃபேமிலி அந்த மதக்கலவரத்தோட இன்னொரு செட் ஆஃப் விக்டிம்ஸ்னு எல்லாரும் நெனச்சாங்க. ஆவணங்கள் அதைத் தான் சொல்லுது. ரொம்பப் பேர் அதை உண்மைன்னு நம்பினாங்க. அதுல நீயும் சேர்த்தி.”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”

“ரொம்ப நாளாவே ஐ எஸ் ஐ யும் இலங்கையோட தமிழ் புலிகள் மத்தியில இருக்கற சில பேருக்கும் உள்ள தகாத உறவு எங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டிச் சொத்துக்குள்ள ஒரு பெருச்சாளியை நாங்க அனுப்பினோம். இன்ஃபர்மேஷன் வர ஆரம்பிச்சுது. அந்தப் பெருச்சாளியை புலிகள் இந்தியாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணின டைம்ல தான் இலங்கைக் கலவரம் அதிகமாயி… அதுல கொஞ்சம் காம்ப்ளிக்கேஷன்…. எப்படியோ … அந்த ஏஜன்டோட ஐடென்டிடி பாகிஸ்தான் டீமுக்குத் தெரிஞ்சுபோச்சு … இந்த ஏஜன்டுக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கற ஒரு வீக் மொமென்ட்ல … கள்ள நோட் மேட்டரை செட் அப் பண்ணி … “

பாப் கை கொஞ்சம் நடுங்கிற்று. மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“அந்த ஏஜன்டோட பெயர் … சிவபுண்ணியம் பட்குணராஜா. கோட் நேம் அமேலியா லூயிஸ்.”

“வக்காளி!”

“நாங்க அவள நேரடியா வெளியே எடுக்க ட்ரை பண்ணினது வெளியே தெரிஞ்சா ரொம்பச் சிக்கலாயிரும்னு, உன் மூலமா அத்தச் செஞ்சு, ஃபுள் டீடெயில்ஸ அவ மூலமாவே உனக்குக் குடுக்கலாம்னு இருந்தப்ப…  பாவம் … அமேலியான்ற சிவபுண்ணியத்தை ஜெயிலுக்கு வெளியே போட்டுத் தள்ளிட்டாங்க. தனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, உனக்கு ஒரு கிஃப்ட் குடுக்க சிவபுண்ணியம் முடிவு செஞ்சிருந்தா. அதைக் குடுக்கறதுக்காகத் தான் நா இங்க காத்துகிட்டு இருக்கேன்.”

அவன் தனது பெட்டியைத் திறந்தான்.

“ஜெட் ஏர்வேஸ் டெல்லி ஃப்ளைட்… லாஸ்ட் கால் ஃபார் மிஸ்டர் ராபர்ட் லூயி,”ன்னு அறிவிப்பு என் காதில் விழுந்தது.

ஒரு கனமான கவரை எடுத்த ராபர்ட், கவனமாகப் பெட்டியை மூடி, எழுந்து நடக்க ஆயத்தமாயி, அதை என்னிடம் நீட்டினான்.

“உன்னை எப்படி ரீச் பண்ணறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்துல கேள்வி எதுவும் கேக்காத பதில் சொல்ல நேரமில்ல. ஃப்ளைட்க்கு டைம் ஆயிரிச்சி. கவர்ல நிறையா ஸர்ப்ரைஸஸ்…” சம்பிரதாயத்திற்கு கை குலுக்கி, அவன் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

கவரைப் பிரித்தேன்.

சுமார் 15 காகிதங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே… எனக்கு மிகவும் பழக்கமான கையெழுத்தில், சாவித்ரி இறுதியா “டார்லிங் துரு”ன்னு கடிதத்தை ஆரம்பிச்சிருந்ததை கவனித்தேன். மனசை என்னவோ செய்தது.

-தொடரும்.

பின் குறிப்பு:

இந்தக் கதையின் முன் அத்தியாயங்களைப் படிக்க, கீழ்க்காணும் லிங்குகளைக் க்ளிக் செய்யவும்:

அத்தியாயம் 12அத்தியாயம் 11அத்தியாயம் 10அத்தியாயம் 9அத்தியாயம் 8அத்தியாயம் 7அத்தியாயம் 6அத்தியாயம் 5அத்தியாயம் 4அத்தியாயம் 3;  அத்தியாயம் 2அத்தியாயம் 1

Advertisements

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “உளவுகாத்த கிளி – 13”

  1. Dear Sir,
    Read Ulavu Kattha Killi. Really a mind-boggling suspense. Feel pity for Savitri. Looking forward to its continuation.
    Thanks and regards,
    Venugopal

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s