ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவின் சதிவலை வேலையா? – 3

விரைவில் தமிழக சட்ட சபை கலைக்கப்பட்டு தேர்தல்கள் வரும் இன்றியமையாத நிலையை ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரிய போராட்டத்தின் அவலமான முடிவு ஏற்படுத்தி உள்ளது.

புத்திசாலிக் கிரிமினல்கள் ஏதேனும் ஒரு தவறைச் செய்து மாட்டிக் கொள்வார்கள்.

சசிகலாவும், அவரைச் சுற்றியுள்ள மன்னார்குடிச் சதிகார மாஃபியா கும்பலும் அப்படி 3 தவறுகளைச் செய்து மாட்டிக்கொண்டுள்ளன.

[1]

எந்தவித உயிலும் படிக்கப்படாமல், சசிகலா – மறைந்த ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் தங்கி தமிழகத்தை ஆட்டிப் படைத்து வருகிறார்.

உயில் இல்லாமல் அவர் அங்கு தங்க யார் அனுமதித்தார்கள் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினார்கள். விடை சொல்லப்படவில்லை.
அக்கேள்வி விரைவில் நீதிமன்றங்களில் எழுப்பப்படும். அன்று பாடு திண்டாட்டமாகி விடும்.

[2]

பிரதமர் முதல், தமிழக ஆளுனர் முதல், தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர் உட்பட இந்திய அரசியல் சட்டப்படி மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பிலுள்ள யாரையும் அப்போலோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரைச்சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நிலையில் ஜெயலலிதா இடைத் தேர்தல் விஷயத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அதற்கான அனுமதியை கை நாட்டு வைத்து அளித்தார் எனக் கூறிய விஷயம் சசிகலாவை சிறைக்கு அனுப்ப வல்ல சம்பவம். உயில் இருப்பது கூறப்படவில்லை. இருந்தால் அதில் கை நாட்டு செல்லாது. செல்லும் என வாதிட்டால், நீதிமன்றத்தில் அப்படி ஒரு ஆவணம் இருப்பதாகச் சொன்னால் அது பல்லை இளித்து விடும்.

[3]

இதை எல்லாம் மறைக்க ஜல்லிக்கட்டு கேட்டு மக்கள் போராட்டம் என்ற கூத்தை தமிழகத்தில் இந்தியாவின் எதிரி சக்திகள் உதவியுடன் சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குழுவிலுள்ளவர்கள் நிகழ்த்தினார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கூட்டம், “தானாக உருவான மக்கள் எழுச்சி” உருவாக்கிய கும்பல் என்பது கட்டுக் கதை. சென்னையின் மெரீனா கடற்கரையின் தெற்கு எல்லையில் காவல்துறை தலைமை பீடம், வடக்கில் ஆட்சிக் கட்டிலான புனித ஜார்ஜ் கோட்டை. இந்த இரண்டு அமைப்புக்களின் கண்களின் மண்ணைத் தூவி சில லட்சம் மக்கள் சென்னையில் கூடி தலைநகரை “தலை-நரக”மாக்கினார்கள் என்பதை இரண்டு காதுகளிலும் பூங்கொத்தைச் சொருகிக் கொண்டவர்கள் கூட நம்ப மாட்டார்கள். நடராஜன் போன்ற சகுனிகளின் பேராசை மிகுந்த அரசியல் சூதாட்டத்திற்கு ஏமாந்த தமிழக இளைஞர்கள் உருட்டப்பட்ட, பின்பு காயமடைந்த, இறுதியில் பெயர் கெட்ட பகடைக்காய்களானார்கள்.

Advertisements

சசிகலா-நடராஜன் தலைமை தாங்கும் மன்னார்குடி மாஃபியாக் கும்பலுக்குச் சாதகமாக செய்திகள் உருவாக காவல்துறையின் பல பிரிவுகள் ஜல்லிக்கட்டு கேட்டுக் கூடியிருந்த இளைஞர்களை அடித்து உதைத்து, பொதுச் சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து, ஒரு சில இடங்களில் குடிசைகளையும் வண்டிகளையும் கொளுத்தி, பத்திரிக்கையாளர்களைத் தாக்கி, அதைக் காவாலித் துறையாக்கின. அது நடந்தும், பல உண்மைகளை, தமிழகத்தின் முக்கியமான ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பது செய்யும் தொழிலுக்கு இழைக்கும் துரோகம். உண்ணும் வீட்டிற்கு செய்யும் ரெண்டகம். அது என்னொரு வெட்கக்கேடு.

சசிகலாவின் சதி வேலை தமிழக அரசியலை சகதி ஆக்கிவிட்டது.

உள்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆளும் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாகி விட்டது. ஒரு புறம் அவர் சசிகலாவின் நட்டுவாங்கத்திற்கேற்ப குனிந்தபடி நடனமாடுகிறார். மறுபுறம் டெல்லி அரசியல்வாதிகளின் சித்து வேலைகளுக்கு நெளிந்து கொடுத்து நல்லபெயர் வாங்குவதாக எண்ணி, எளனத்திற்குரியவராகிவிட்டார்.  அவர் கையில் தமிழக ஆட்சி இருப்பது குரங்கின் கையில் பூ மாலை இருப்பதற்குச் சமம்.

குறுக்கு வழியில் அ இ அ தி மு க சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒரு பேச்சுக்கு ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு உண்டு என்று கூடச் சொல்லலாம். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அது அவருக்கும் சரி, தமிழகத்திற்கும் சரி, நாட்டின் ஒருமைப்பட்டிற்கும் சரி, பெரும் குந்தகமாக முடிந்து விடும்.

இனி மறு தேர்தல் ஒன்று தான் முடிவு.

ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்திற்குத் தேவை என்பதில் சந்தேகமில்லை. அதைத் தடை செய்ய PETA பொன்ற வெளி நாட்டின் கூலிப்படை இயக்கங்கள் செயல்படுவது நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம் என்பது தெளிவு.

இந்தியப் பசு இனத்தை அழித்து, வெளி நாட்டு ஜெர்ஸி மாடுகளை பாரதத்திற்குள் நுழைத்து, அந்த நச்சுத்தன்மை உள்ள பாலால் நோய்களைப் பரப்பி, அதை குணப்படுத்த மேலும் விஷத்தன்மை உள்ள மருந்துகளை விற்று, ஈனப்பிழைப்பு நடத்தும் பிண வியாபாரிக் கும்பலின் அடாவடி வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படவேண்டும். இந்தியப் பசுக்களின் கழிவுகளான சாணமும் கோமியமும் சிறந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகள். ஆனால், அவற்றுக்குப் பதிலாக விஷத்தன்மை உடைய ரசாயன உரங்கள் , மருந்துகள், நமது தாய் மண்ணணுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன.

ஆனால் அச்செயலை நிகழ்த்த பின்பற்றப்பட்ட முறை முட்டாள்தனத்தின் உச்சகட்டத்தின் துச்சகட்டம்.

ஜனவரி 12 2017 அன்றே சசிகலா ஜெயலலிதாவுக்கு இழைத்த துரோகத்தின் பயங்கரத்தை வெளிப்படுத்தினேன்.

அது முதல் “சசிகலா விரைவில் முதல்வர் ஆவார்” என்ற கூச்சல் திடரென உரக்கமான நிசப்தமாக மாறியது.

ஜல்லிக்கட்டு போட்டியைக் கோரி போராட்டம் ஜனவரி 20 அன்று நடு முதுகில் முளைத்த கை போல் உருவாயிற்று. ஜெயலலிதாவின் திடீர், மர்மம் நிறைந்த மரணத்தில் சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் உள்ள தொடர்பை மறைப்பதற்காக மட்டுமே இது ஏற்படுத்தப்பட்டது என எழுதினேன்.

அப்போதே, இதன் முடிவு இப்படித் தான் இருக்கும் என இக்கட்டுரைத் தொடரில் தெளிவாகச் சுட்டிக் காண்பிக்கப்பட்டது.

சசிகலாவைக் குறுக்கு வழியில் முதல்வராக்கும் கேவலமான பணியைத் துவக்கிய நடராஜன், அந்தச் சதித்திட்டம் வெற்றிபெற இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான விடுதலைப் புலிகளுடன் இணைந்து நாசவேலையில் இறங்கியுள்ள பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனம் ஐ எஸ் ஐ, இஸ்லாம் என்ற மதத்தை இழிவு படுத்தும் ஐ எஸ் ஐ எல் ஆகிய தீய சகதிகளுடன் கைகோர்த்துச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை அக்கட்டுரையில் வைத்தேன்.

சசிகலா முதல்வராக்கச் செய்யப்படும் சதி வேலை தான் ஜல்லிக்கட்டு போட்டிக் கோரிக்கைப்போராட்டம் என 5 நாட்களாக எழுதி வருகிறேன். ஆதாரங்கள்:

http://wp.me/p7bYkZ-RX

http://wp.me/p7bYkZ-SX

சசிகலா அ இ அ தி மு க வின் பொதுச் செயலாளராக “ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்பது அரசியல் வெட்கக்கேட்டின் உச்சகட்டம், என ஒரு மாதம் முன்னரே எழுதினேன்.

அவரை தமிழகத்தின்மாற்றாந்தாய்என தமிழ் மக்களின் கருத்தின்படி எழுதினேன்.

இரண்டு மாதங்கள் முன்பே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழகத்தில் அரசியல் ஆட்டம் காணும் எனக் கூறினேன்.

அதுவே நடந்துள்ளது.

நான் சொன்னபடியே நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகின்றன என்பதால் இக்கட்டுரையாளனுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அல்ல, மிகுந்த மன வேதனை.

2013 முதல் சோனியா அம்மையார் பாகிஸ்தானின் உளவாளி என்றும், சசிகலா தி மு க தலைவர் கலைஞரின் கைப்பாவை என்றும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறேன்.

1967-இல் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தன. அன்று முதல் தேசியம் தமிழகத்தில் மடியத் துவங்கியது.

மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் இந்தியாவின் ஒருமைப்பாட்டை நம்பினார். அவர் உயிரோடு இருந்த காலம் வரை நிலை கட்டுக்குள் இருந்தது.

1991 இல் தி மு க ஆட்சி இந்தியாவின் எதிரிகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டதற்காக கலைக்கப்பட்டது.

அதே வருடம் ராஜீவ் கொலையும் நிகழ்ந்தது.

அதன் பின்னணியில் உள்ளது சோனியா அம்மையார் தான் என நான் 2010 முதல் குற்றச்சாட்டை அடுக்கி வருகிறேன்.

அதன் லேடஸ்டான நிலையை 8 மாதங்கள் முன்பு வெளியிட்டேன்.

தமிழகத்தில் இனி என்னென்ன அவலங்கள் நிகழப்போகிறதோ!

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவின் சதிவலை வேலையா? – 3”

  1. Dear Sir,

    Thanks again for the informative piece on Jallikkattu and Sashikala-Natarajan game behind it. Arun Jaitley-Sashikala nexus is also not ruled out. The time has come for Modi to provide a free-hand to Panneerselvam. Dinamalar report suggests that the PM had realised the helplessness of the CM and is keen to assist him. Though MGR did not scuttle the steps taken for national integration, he did not oppose Annadurai’s Dravida Nadu demand in 1967. He played according to the gallery. In 1991 DMK Govt was dismissed by citing LTTE as the reason, but the reality is that Chandrasekar in connivance with Rajiv Gandhi played the game to accede to the demand of Jayalalithaa in return for her support. The then Governor S.S. Barnala did not sign and he was transferred with an amiable Governor. No wonder Chandras3khar said “Bofors case should be taken care of by the Sub Inspector. That was the joke of the year.
    Thanks and regards,
    Venu

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s