ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவின் சதிவலை வேலையா? – 2

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத சக்திகளின் நாசவேலை!

ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டத்தை மறைந்து நடத்தும் தேச விரோத சக்திகள் இந்திய ஒருமைப்பட்டின் தாடையில் இரத்தகாயத்தை ஏற்படுத்தி விட்டன.

இக்கட்டுரை எழுதப்படும் வேளையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட ஒரு அவசரச் சட்டம் தயாராகி உள்ளதாக செய்திகள் வெளியாயின.

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் PETA தடை கோருமா?

அப்படி ஒரு பிராது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படுமா?

அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீண்டும் தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் தமிழகத்தில் வன்முறை தலைவிரித்தாடும்!.

அது நடந்தால், தமிழகம் இன்னொரு காஷ்மீராகி விடும்.

சுருக்கமாக, இது மக்களை மாக்களாக்கி செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் சதியின் வெளிப்பாடு!

Advertisements

ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவை முதல்வராக்க பின்னப்பட்ட சதி வலை என விரிவாக, ஆதாரங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில், தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கும், மாநிலத்தின் ஆட்சிக் கேந்திரமான புனித ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே உள்ள காமராஜர் சாலையில், பிரிவினைவாத கோஷங்கள் உரக்க ஒலிக்கத் துவங்கி விட்டன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல உத்திரவிட்ட, லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈழத்தில் கொல்லப்படக் காரணமாக இருந்த “விடுதலைப் புலி பயங்கரவாதி” பிரபாகரனுக்குத் தியாகி அரிதாரம் பூசப்பட்ட ஒரு அவலக் காட்சி அரங்கேறியது. அத்துடன் “தமிழ் ஈழம் வேண்டும்” என்ற கூச்சலும் கிளம்பி உள்ளது.

ஆதாரம்: http://www.thenewsminute.com/article/eternal-lament-being-tamil-modi-loses-face-veneer-dignity-falls-marina-56046

PETAஎன்ற மிருக உரிமைகளுக்காகப் போராடும் தன்னார்வு அமைப்பின் பெயர், அமெரிக்காவில் ஈடுபடும் கேலிக்கூத்தான செயல்களால் “ரிப்பேராகி” நாறுகிறது என்ற செய்தி ஆதாரங்களுடன் வெளிவந்து விட்டது.

ஆதாரம்: https://t.co/B6UT1CbqWr

மிருகங்களுக்கெதிரான கொடுமைகளைத் தடுக்கிறோம் பேர்விழி என்று கிளம்பிய PETA ஏமாந்த சோணகிரிகளின் காதுகளில் பூ சுற்றி, சில்லறை சேற்கும் ஒரு சகதித்தனமான சதி கும்பல்!

பாரதத்தில் கிட்டத்தட்ட 60% மக்கள் புலால் உணவு உண்பவர்கள். பசு மாடுகள், ஆடுகள், கோழிகள், மீன்கள் என பல தரப்பட்ட அசைவ உணவு வகைகளை எல்லா விதமான சமய நம்பிக்கை உடையோரும் இந்தியாவில் உண்கிறார்கள்.

அதற்கு இரையாகும் மிருகங்கள், தங்களை “வெட்டிக்கொன்று உண்டுவிடுங்கள்” என விண்ணப்பம் செய்கின்றனவா? அல்லது கசாப்புக் கடைக்காரர்கள் கருணை அடிப்படையில் தங்களது தொழிலை நடத்துகிறார்களா?

எத்தனைக் கசாப்புக்கடைகள் முன்பு PETA தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்துகிறது?

அந்த அமைப்பிற்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சுத்த சைவ உணவை மட்டும் உண்டு, பால் கூட [அதுவும் ஒரு விதத்தில் அசைவமே] அருந்தாத மூலையில் முடங்கி உள்ள முனிவர்களா?

எங்கோ இருக்கும் விஷமிகள் இது மாதிரியான கிலிமஞ்சாரோ அமைப்புக்களை உருவாக்கி, உலகில் விஷக்கிருமிகள் போல் பரவ விட்டு அதில் நயவஞ்சக நரித்தனமான பிழைப்பு நடத்தும் நாசவேலைக்கார அரக்கர்கள் கும்பல் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

அபிஷேக் மனு ஸிங்க்வி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் வழக்கறிஞர்களும் இந்த அமைப்பிற்காக ஆஜராகிறார்கள். அவர் பால் கூடக் குடிக்கத் தெரியாத பாப்பாவா? ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுக்கதைகளை இது போன்றவர்கள் புனைந்து பரப்புகிறார்கள். தடை உத்திரவுகளைப் பெற்று, நாட்டில் குழப்பத்தை விளைவிக்கிறார்கள்.

இது போன்ற பணிகளைச் செய்யக் கூடியவை – தேச விரோத சக்திகள் மட்டுமே.

ஆகவே, தேச விரோத சக்திகள், அமைதிப் பூங்காவான தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக மாற்றச் செய்து வரும் இழி செயல் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன.

தமிழ் ஈழத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் மத்தியில் உள்ள உறவு எனக் கிண்டல் செய்யலாம். ஆனால், அந்தக் கேலிக்கூத்து காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பே அரங்கேறும் அலங்கோலம் அனுமதிக்கப்படுவது மட்டுமல்ல, ஊக்குவிக்கப்படுகிறது!

அதன் உள் நோக்கம் என்ன?

ஜல்லிக்கட்டுப் போட்டியால் காளைகள் வாழும்.

அவை பசுமாடுகளுடன் கூடி, கன்றுகளை உருவாக்கும்.

இந்தியாவிலுள்ள மாடுகளின் பால் ஊட்டச்சத்து மிக்கது. வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஜெர்ஸி மாடுகள் வழங்கும் பாலால் நோய்கள் பரவுகின்றன என்பதற்கு விஞான ரீதியான ஆதாரங்கள் உள்ளன.

இந்த நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி ரசாயன மருந்துக் கம்பெனிகள் வெட்கங்கெட்டப் பிழைப்பு நடத்துகின்றன.

இவை எல்லாமே நாட்டுக்குக் கெடுதல் செய்யக்கூடியவை.

ஆனால் அதெல்லாவற்றையும் விட வேறு ஒரு பெரிய அபாயம் உள்ளது.

இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ளதாகக் கூறப்பட்டு வந்த காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை விவாதத்திற்குரியதல்ல எனத் தீர்ப்பு வழங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த ஒரு விஷயத்தை வைத்தே பிழைப்பு நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் கையூட்டுப் பெறும் கயவத்தனமான தளபதிகளுக்கு இந்தியாவில் சிக்கலை உருவாக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற ரீதியில், அதற்காகப் பயன்படுத்தப்படுவது தமிழகம்.

இதற்கான திடுக்கிடும் ஆதாரங்கள் உள்ளன!

இதனால் அரசியல் ஆதாயம் பெறும் சசிகலாவைச் சுற்றியுள்ள சிலந்திவலை பின்னிய ருத்திராட்சப் பூனைகள் பின்னணியில் இயங்குகின்றன. ஆனால் நடராஜன் போன்றோரின் பின்னிலிருந்து பாரதத்திற்குப் பாதகம் செய்பவர்கள் யார்?

கதிகலங்க வைக்கும் ஆதாரங்கள், நாளை!

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “ஜல்லிக்கட்டுப் போராட்டம் சசிகலாவின் சதிவலை வேலையா? – 2”

  1. Dear Sir,
    Thanks for one more super article. It reveals the murky happenings behind the scene. How many PETA sympathisers are strict vegetarians, especially the lawyers. It is a dangerous game they are playing at the expense of Tamil Nadu. In the name of Jallikattu, both the DMK and Sashikala camp are trying to gain political mileage. As the writer had pointed out earlier, it was the DMK and the Congress that engineered a ban on Jallikattu. The author is also right in stating that sub-judice is nothing but a ploy. The rail-roko could have been averted, as it has inconvenienced many people. It reminds me of Karunanidhi’s stunt in 1953, when he placed his head on the railway track, threatening to commi5 suicide over changing the name of the railway station to Dalmiapuram. When some passengers asked the engine driver to start the train, the DMK chief ran away from the spot. The agitation is now reminding us of the 1965 Hindi agitation. Unfortunately, the youth became the victim again.
    Thanks and regards
    Venu

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s