உளவுகாத்த கிளி – 12

The latest chapter from my international spy thriller penned in Tamil.
இந்தக் கதையின் முன் அத்தியாயங்களைப் படிக்க, கீழ்க்கண லிங்குகளைக் க்ளிக் செய்யவும்:

Advertisements

அத்தியாயம் 11

அத்தியாயம் 10

அத்தியாயம் 9

அத்தியாயம் 8

அத்தியாயம் 7

அத்தியாயம் 6

அத்தியாயம் 5

அத்தியாயம் 4

அத்தியாயம் 3

அத்தியாயம் 2

அத்தியாயம் 1

“இந்தத் தொழிலை ஒரு வித வியாபார ஸ்தாபன அடைகாத்தல் – [ஆங்கிலத்தில் Incubation] ன்னு  வர்ணிக்கலாம். இது ஏதோ புதுசா டெவலப் ஆனதா சில பேரு சித்தரிக்கறாங்க. ஆனா, இந்த யுக்தி ரொம்பப் பழசு. ஒரு விதத்துல, இது கி பி 1600ல ஆரம்பிச்சதுன்னுகூடச் சொல்லலாம்.” சொல்லும்போது அவரிடம் ஒரு விதமான கேலி கலந்த நமட்டுச் சிரிப்பு.

எனகுக் கோபம் வந்தது.

“1600 ல உங்க நாட்டோட கிழக்கு இந்தியக் கம்பெனி எங்க ஊருக்கு வியாபாரம் செய்ய வந்திச்சின்னு நினைவு. வியாபாரம் பண்ணவந்த வெள்ளையன், எங்க நாட்டுக் குறைமதிக் குறு நில மன்னர்களோட பேராசையைப் பயன்படுத்தி, இல்லாத வில்லங்கப் பத்திரங்களை  உருவாக்கி, எங்களை சட்ட விரோதமா 1947 வரைக்கும் ஆண்டாங்க,” என்றேன்.

“உங்க கோணத்துலேந்து பார்த்தால், அப்படித் தெரியும். அதுக்கான கோபம் கூட நியாயம் தான். ஆனா, என்றைக்குமே, எவனும் தானதர்மத்துக்காக வியாபாரம் செய்யறதில்லை. ஏமாறறவங்க அகப்பட்டா, எவன் வேணும்னாலும் ஏமாத்திக் கொள்ளை அடிப்பான். எங்க ஊரின் பழங்காலத்து ஆளுங்க இதுக்கு விதிவிலக்கில்ல. பார்க்கப்போனா, சுமார் 3,000 வருஷங்களுக்கு முன்னால அலக்ஸான்டர் புருஷோத்தமர் ங்கற மன்னரை உங்க ஊரு ஆளு ஒருத்தர் – ஆம்பி ராஜா தான் காட்டிக் குடுத்தாரு. அன்னியர்கள் ஆட்சி ஆரம்பமாயிரிச்சி. அப்புறம் சீனாவோட ஜெங்கிஸ் கான் லேந்து தொடங்கி, நாடிர் ஷா ன்னு எத்தனையோ பெயர்கள். அவனவன் வெவ்வேற காரணங்களச் சொன்னான். அவ்வளவுதான். அதுக்கப்புறமா, சொந்த மாமனார் காட்டிக் குடுத்ததுனால தான் டெல்லியை ஆண்ட ப்ரித்விராஜ் சௌஹான் முஹம்மது கோரி கிட்ட தோற்றான். கோரியோட அடிமைகள் பல தசாப்தங்கள் ஆண்டாங்க. அதுக்கப்புறம் அந்த ஆட்சி நாற ஆரம்பிச்சுது. அதுல ஒருத்தன் பேரு துக்ளக். அந்த வகையறாவுல கடைசி ஆளு இப்ராஹிம் லோதி. அவனை வேற ஒரு உள்ளூர்க்காரன் – ஆஃப்கானிஸ்தான்லேந்து வந்த பாபர் கிட்டக் காட்டிக் குடுத்தான். – முகலாயர்கள் இந்த நாட்டை சில நூற்றாண்டுகள் ஆண்டாங்க. ஐரோப்பாவுலேந்து – ஃப்ரெஞ்சுக் காரங்க, நெதர்லான்டு காரங்க, இத்தாலியருங்க, ப்ரிட்டன் … இப்படி எல்லாரும் நாடு பிடிக்க வெவ்வேற அணுகுமுறையை யூஸ் பண்ணினாங்க.”

அவர் சொன்னது எனது கோபத்தை அதிகரிக்கச் செய்தது.

“அன்னியர்கள் பண்ணின தப்புக்களை நீங்க நியாயப்படுத்தறது போலத் தெரியுதே!”

“எல்லாக் குற்றவாளிகளும் அதைச் செய்யறது சகஜம். உங்க ஊரு மஹாத்மா காந்தியைத் தவிர, எவனுமே, தானா முன்வந்து, ‘அய்யா நான் செஞ்சது சட்டப்படிக் குற்றம். அதுனால என்னை, கால தாமதம் பண்ணாம தண்டியுங்கன்னு’ சொன்னதே கிடையாது.”

பீஹார் மாநிலத்தின் சம்பாரன் பகுதியில், போதைப் பொருளாக விற்கப்படும்போது கொள்ளை லாபம் ஈட்டித் தந்த அபினி என்ற போதை வஸ்துவுக்கு சிவனார் வேம்பு [ஆங்கிலத்தில் Indigo plantation, ஓபியம்] என்று அழைக்கப்பட்ட செடிகளை ஏழைகளை அடிமைகளாக்கி, பல ரவுடிச் செல்வந்தர்கள் பயிரிடச் செய்தார்கள். முன்பணக் கடனளித்து அறுவடையான செடியை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல்செதனர். இதில் உள்ள லாபத்தை பிற்காலத்தில் கண்ட வெள்ளையர்கள் அதே தொழிலை மேலும் வெளிப்படையாக, ஏழைகளை அதிகமாகச் சுரண்டியபடி செய்தனர். 1917ல், காந்தியடிகள் சம்பாரனில், பிற்காலத்தில் நாட்டின் முதல் இந்திய ஜநாதிபதியான ராஜேந்தரப் பிரசாத் போன்ற பிரபல வக்கீல்களின் உதவியுடன், தொழிலாளிகளுக்காகப் போராடினார். காவல்துறை அவரைக் கைது செய்தது. வெள்ளையர்கள் கோலோச்சிய நீதிமன்றத்தில் அவர், அரசு தரப்பு வக்கீல் குற்றப்பத்திரிக்கை படிக்கும் முன்னரே தான் சட்டத்தை மீறியதை ஒப்புக்கொண்டு சிறை செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதன்பின், அப்பகுதியில் எந்த இந்தியரும், எந்தப் பணிக்கும் செல்லவில்லை. கழிவுகள் அகற்றப்படுவது முதல், ஷவரம் செய்வது வரை, அடிமைகளை விட்டுச் செய்யச்சொல்லியே பழகிவிட்ட வெள்ளையர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. வேறு வழியின்றி மஹாத்மாவை விடுதலை செய்தார்கள். உண்மையில் இந்தியச் சுதந்திரப் போர் சூடு பிடித்தது அந்த நிகழ்விலிருந்து தான்.

“நிகழ்வு நினைவில் இருக்கிறது,” என்றேன் சுருக்கமாக.

“உங்கள் நாட்டின் சுதந்திரப் போர் உண்மையில் 1857லேயே துவங்கியது. ஆனால் உங்களுள் இருந்த பிரிவுகளின் உதவியுடன் அந்தக் காலத்து வெள்ளையர் ஆட்சியாளர்கள் அதை நசுக்கினார்கள். ப்ரிட்டிஷ் அரசு முறையாக, நவம்பர் 1 1858ல் விக்டோரியா மஹாராணியின் பிரகடனத்துடன் செயலுக்கு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட சிப்பாய்களைக் கூட ப்ரிட்டிஷ் படை பெருந்தன்மையோட ஏற்றதுன்னு பாவ்லா காட்டி மக்களுக்குக் குல்லாப்போட்டாங்க. விக்டோரியா அரசி கிழக்கு இந்தியக் கம்பெனியின் சொத்துக்களை அரசுடைமை எனப் பிரகடனப்படுத்தறப்ப, தனது ஆட்சி எல்லாக் குடிமக்களுக்கும் நியாயம் வழங்கும்னு சொன்னாரு. நடந்தது அதுக்கு நேர் எதிர். அப்போதே – என்றேனும் ஒரு நாள் அடுத்த சுதந்திரப் போர் துவங்கும் என்று கணக்கிட்டார்கள். அதை எதிர்கொள்ளத் திட்டங்கள் உருவாயின. இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைக்க சில சாமர்த்தியமான யுக்திகள் பயன்பட்டன. அவற்றில் ஒன்று ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு. அது 1871 முதல் அமலுக்கு வந்தது. முதலில் அனைத்துத் தரப்பினரும் தங்களை வெவ்வேறு அந்தணர்கள் குலத்தவர்கள் என்றார்கள். சில உதாரணங்களைச் சொல்லலாம். பொற்கொல்லர்கள் தங்களை விஸ்வப் பிராம்மணர்கள் என்றனர். அன்று தங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ எனக் கூறிக்கொண்டவர்கள் இன்று நலிந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், தேவேந்திரன் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வாறு நலிந்தவர்கள் ஆவார்கள் என்ற கேள்வியை, அன்று யாரும் கேட்கவில்லை. இராமயணத்தை எழுதிய வால்மீகியை ஒரு முனிவரெனப் பழங்காலம் முதல் போற்றும் இந்த நாட்டில், வால்மீகி என்ற பெயருடையவர்களை இன்று தீண்டத்தகாதவர்கள் என வட இந்தியாவில் இழிவு படுத்துகிறார்கள். சமூக ரீதியாக அநீதிகளை அனுபவித்தோருக்கு இலவசக் கல்வி, அரசுப் பணிகள், அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு என்றேல்லாம் அன்று வெள்ளையர்கள் நுழைத்ததால், பிராம்மணர்களும் ஒரு சில ஷத்திரியர்களையும் தவிர, பிற எல்லாத் தரப்பினருமே, சுயனலத்துக்காக, தங்களை நலிந்தவர்கள் என்றனர். இந்தியாவை ஜாதி, மத அடிப்படையில் பிரித்து ஆள இந்த யுக்தி பெரிதும் உதவியது. இந்த திட்டத்தை உயர்த்திப் பிடிச்சு, என்றைக்குமே அடிமை மனப்பான்மையோட செயல்பட இந்தியர்களை பயன்படுத்தற இன்னொரு பரிமாணமாக, வெள்ளையர்களை எதிர்க்கறதாக சொன்ன இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை 1885 இல் ஸர் அலன் அக்டேவியன் ஹ்யூம் என்ற முன்னாள் அதிகாரி – இவர் 1857 இல் நடந்த சுதந்திரப்போரில் உள்ளூர்க்காரர்களை தோற்கடித்தவர், துவங்கினார். அதுவும் ஒரு போர் தந்திர மந்திரம். ஏமாத்தறவங்க லாபத்துக்காக அதைச் செஞ்சாங்க. ஆனா, கொஞ்சம்கூட சிந்திக்காம ஏமாந்தது யாரு?”

எனது எரிச்சல் அதிகமாகியது.

“அமாய்யா! ஒவ்வொரு ஏமாத்தறவனும், முடிச்சவுக்கியும் இப்படியே சொன்னானுங்க, சொல்லறாங்க, சொல்லுவானுங்க! ஆனா, அது அன்றும் சரி, இன்றும் சரி, சட்டப்படிக் குற்றம்!”

எனது குரலில் உள்ள காழ்ப்புணர்வை நான் மறைக்கவில்லை..

“அந்த வாதம் ரொம்ப, ரொம்ப கரெக்ட்,” என்றார் அந்த நபர் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி.

“இவ்வளவு கோர்வையா இந்த விஷயத்தைச் சொல்லறீங்களே, இதுவும் நீங்க செய்யற வியாபாரத்தைப் பெருக்க உதவற யுக்தி தானா?”

“1947 இல் – காங்கிரஸ் சுதந்திரம் வாங்கித் தந்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடிச்சிச்சு. அந்த ஆட்சி சுமார் 70 வருஷம் நீடிச்சிரிச்சி. உள் நாட்டுலயும், அல்லசல் நாடுகள்ளயும் பகை விதைகளை நாங்க நட்டோம். செடியை காங்கிரஸ் வளர்த்து, அதை அறுவடை பண்ணினதால, அதுக்கான உரங்களான ஆயுதங்களை அன்றிலிருந்து இன்று வரைக்கும் வெவ்வேறு நாடுகள் உங்களுக்கு விக்கறாங்க. விக்கற நாடுகள் தலைவர்கள் வெள்ளைத் தோல் உள்ளவங்க தான். இந்த ஒரு விஷயத்துக்காக உங்க நாடு மட்டுமே ரூ.80 லட்சம் கோடிகளைச் செலவழிச்சிருக்கு. அதுல – பொருட்களை வித்த நாடுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் கோடிகள் லாபம்!  உயிர்ச்சேதத்துனால பகை அழியாம இருக்கு. அதுவும் ஆயுதம் விக்கற நாடுகளுக்கு லாபம். 18 ஆம் நூற்றாண்டுலேந்து நாங்க ஏமாத்தினோம்ங்கறது எந்த அளவுக்குச் சரியோ, அதேபோல உங்க நாட்டை சமீபகாலம் வரைக்கும் ஆண்ட உங்க அரசியல்வாதிகளும் அதையே செய்யறாங்கங்கறதும் ஒரு மறுக்க முடியாத உண்மை.. ஆக, தவறு யாரோடது?”

“உங்க வார்த்தைகள்ள இருக்கறது பச்சையாகத் தெரியும் இறுமாப்பு, ஆணவம்!”

“அது உங்க கண்ணோட்டம். ஆங்கிலத்துல இதை ஒரு மாதிரியான வாணி…க்க்க்க்கும்….சிகரெட் புகை தொண்டையில சிக்கிகிச்சு … வனித் …. வனிதா …. க்க்க்க்க்க்கும் …. வானிட்டின்னு சொல்லுவாங்க..”

இந்த ஆளுக்கும், வனிதாவுக்கும் ஏதோ கனெக்ஷன் உண்டோ? எனது புருவங்களை நெரித்தேன்.

“வானிட்டி ஃபேர்ன்னு ஒரு English நாவல். அதை ஹீரோவே இல்லாத ஒரு க்ளாஸிக் நாவல்னு சொல்லுவாங்க. அதுல இரு வனிதைகள் முக்கியமான கதாபாத்திரங்கள்.. நல்லவளாப் பரிணமித்த ஒருத்தி அதுல விபச்சாரியா இருந்தா…பாவம்…க்ளைமாக்ஸுக்கு முன்னாடியே இறந்துடறதா சித்தரிக்கப்பட்டா. நான் சொல்லறது 1857ல எழுதப்பட்ட கதையைப் பத்தின செய்தி. அந்த நாவல எழுதினது மேரி அன் எவன்ஸ்ங்கற பெண். ஆனா வெச்சிகிட்ட புனைப் பெயர் ஜார்ஜ் எலியட். அவங்க கணவரோட குடும்பப் பேரு .லூயிஸ்…அந்தக் அந்த வனிதை காரக்டரோட பேரு அமேலியா…எல்லாவிதமான கலைகளுக்கும் உங்க ஊர்ல சிவன் ங்கற கடவுள்தான் ஆரம்பிச்சாருன்னு சொல்லுவாங்க. ஆக, எல்லாக் கதைகளுமே சிவபுண்ணியங்கள்!”

“அடப்பாவி!” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஏன் என்றால், வனிதா தனது பெயரை சிவபுண்ணியம் என்றும், தனது ரகசியப் பெயர் அமேலியா லூயிஸ் என்றும் சொன்னது எனக்குப் பளிச்சென நினைவுக்கு வந்தது.

ஆச்சியர்த்தில் வாயைப் பிளந்தேன்.

“தேவை இல்லாம வாயைத் திறந்தா கொசு புகுந்துடும். சமயத்துல  குண்டுகளும் துளைக்கும்,” என்றார் அவர்.

மீண்டும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

-தொடரும்

 

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

One thought on “உளவுகாத்த கிளி – 12”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s