உளவுகாத்த கிளி – 11

The latest chapter from my international spy thriller penned in Tamil.

Advertisements

ஹேர்ட்ஸ் கார் வாடகைக் கம்பெனி – உள்ளூரிலிருந்தோ, வெளி நாடுகளிலிருந்தோ 4-சக்கிர சொகுசு வண்டி ஓட்டத் தெரிந்த பெரிய மனிதர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கிறது. இந்தியாவில் பல்வேறு லைஸன்ஸ் சிக்கல்கள் காரணமாக, அது போன்ற பல அமைப்புக்கள் வெவ்வேறு பெயர்களில் அதே பணியை –பல்வேறு வியாபார யுக்திகளுடன் செய்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எல்லாமே டாக்ஸிகள்.

மற்ற அத்தியாயங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்!

இதில் ஊபர், ஓலா, ஃபாஸ்ட் டிராக் எனப் பல வகைகள் உண்டு. இவை எல்லாமே ஓட்டுனர்களுடன் வண்டிகளை ஒப்புக்கொண்ட வாடகைக்கு அனுப்புவதாகச் சொன்னாலும், இறுதி நேரத்தில், பேரம் படியவில்லை எனத் தோன்றினால், பின்வாங்கும், அல்லது அதிகக் கட்டணம் வசூலிக்கும் பழக்கம் கொண்டவை.

மத்திய மாநில அரசுகளின் சட்டப்படி டாக்ஸிக்களுக்கான லைஸன்ஸ் பெற சில விதிமுறைகள் உண்டு. வண்டிகள் ஒரு சில நிறங்களில், சட்டப்படி ஒழுங்கு சர்டிஃபிக்கேட் பெற்ற, அரசாங்க முத்திரை/சீல் வைக்கப்பட்ட மீட்டர்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் என்றுமே சிக்கி இராத ஓட்டுனர்களை பணியமர்த்திச் செயல்பட வேண்டும் என்பவை எல்லாம் ஏடுகளில் அச்சிடப்பட்டுள்ள சுரைக்காய்த் தனமான விஷயங்கள். நடைமுறை கறிக்கு என்றுமே இதில் எதுவுமே ஒவ்வாதவை.

அதுபோன்ற ஒரு கம்பெனியை எங்களது அமைப்பும் சத்தம்போடாமல் நடத்துவதாக நடிக்கிறது. என்போன்றவர்கள் எந்த ஊரில் பணி புரிந்தாலும், அந்த ஊரின் நம்பர் ப்ளேட்டுடன் எல்லா விதத்திலும் ஒழுங்கான வண்டிகளை வாடகைக்கு அளிக்கிறது. அந்த வாடகை எங்களது சம்பளத்திலிருந்து பிடிப்டும். தற்போதைய எனது நிலை போல, எந்த ருசுவையும் விட்டுச் செல்லாமல் வெளியேறுகிற நிர்ப்பந்தம் ஏற்படும்போதெல்லாம், அங்கி அணிந்த ஒருவர் வண்டியைப் பேற்றுக் கொண்டு, முன்பே தயாரக வைக்கப்பட்டிருக்கும் ஒரு காக்கி நிற கவரில் ரூ.50,000 ரொக்கம்,  ரூ.1.5 லட்சம் லிமிட் உள்ள கடன் அட்டை, ஒரு ஒழுங்கான – ஆனால் புனைப்பெயரிலுள்ள ஒரு பாஸ்போர்ட் ஆகியவற்றை அளித்து விடுவார். சந்திக்கும் இடம் இரயிலடியாகவோ, ஹோட்டலாகவோ, விமான நிலையமாகவோ, துறைமுக வாயிலாகவோ இருக்கலாம். அப்படி வருபவர் பொதுவாக விமான நிலையத்தில் சொல்லப்படும் வழியனுப்பும் க்ரீட்டிங்ஸ் வார்த்தையைச் சொல்லிவிட்டுச் செல்வார். “ஹாப்பி லான்டிங்க்ஸ்” என்றால் செல்லவேண்டிய இடம் மும்பை. ஹாப்பி லான்டிங்க்ஸ் ஸர், என்றால் புது டெல்லிக்கு டிக்கட் வாங்கிப் பயணிக்கவும் என்று பொருள். இப்படி கொல்கொத்தா, பெங்களூர், ஹைதராபாத், புணே, கோவை, அஹமதாபாத் – என வெவ்வேறு ஊருகளுக்கு வெவ்வேறு சொற்றொடர்கள்.

ஓட்டுனர் அங்கி அணின்து வருபவருக்கு சொற்றொடரின் பொருள் தெரியாது. பெரும்பாலும், அவர்கள் தொழில் கற்கும் கத்துக்குட்டிகள். பிற்காலத்தில் தேர்வு செய்யப்பட்டால், என்போன்ற உத்தியோகஸ்தர்களாகலாம். என்னை வழியனுப்ப வந்தவர் கவரை அளித்து “ஹாவ் ஏ ப்ளஸன்ட் ஃப்ளைட், மை ஃப்ரென்ட்,” என்றார்.

நான் சென்று இறங்க வேண்டியது கொல்கொத்தா என நான் புரிந்து கொண்டேன். வந்தவர், திரும்பிப் பார்க்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

கடன் அட்டையைப் பயன்படுத்தி எனக்களிக்கப்பட்டிருந்த பாஸ்போர்டிலுள்ள பெயரில் டிக்கட் வாங்கினேன். குறிப்பறிந்த எனது சகாக்கள் புதிய ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ. 100 தாள்களை உள்ளே வைத்திருந்தார்கள். கவரை ஜேப்பினுள் சொருகிக்கொண்டேன், கேட் எண் 8 என அறிவிக்கும் போர்டிங் பாஸை சட்டைப்பையில் சொருகிக் கொண்டேன். விமானம் புறப்பட இன்னும் 90 நிமிடங்கள், என்றாள் விமானக் கம்பெனியில் பணிபுரிந்த அழகான பெண்.

“லக்கேஜே இல்லாம போறீங்களே?” சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“பல ஊர்களில் தங்க எனது அலுவலகம் இடம் அளித்துள்ளது. அங்கெல்லாம், துவைத்து, இஸ்த்ரிப்பண்ணின உடைகளும், எனக்குப் பிடித்தமான உணவும் ரெடியாக இருக்கும். வழியில் படிக்க ஏதேனும் புக் வாங்கிச் செல்வேன். உன்னைப்போல யாராவது என்னுடன் பயணிக்கத் தயாரானால், தள்ளிக்கொண்டு செல்லும் பழக்கமுண்டு. உன் வசதி எப்படி?” என்று குறும்பாகச் சிரித்தபடி கேட்டேன்.

“இன்றைக்கு இரவு மேரேஜ் ப்ரொபோஸ் பண்ணற பாய்ஃப்ரெண்டோட எனக்கு டின்னர். 7 மாசம் முன்ன உங்கள சந்திச்சிருந்தா இப்படி ஏதாவது யோசிச்சு இருக்கலாம். ஐ ஆம் கோயிங் ஸ்ட்ராங் வித் மை வுட் பீ. ஹிஸ் நேம் ஈஸ் ராஹுல். ஹி ஈஸ் அ வெரி அண்டர்ஸ்டான்டிங் மேன், அன்ட் வெரி ஹான்ட்ஸம் டூ!” என்று தனது வருங்காலக் கணவரைப் பற்றிப் புகழ்ந்தாள்.

“ஓ கே என்றால் – இங்கே ட்யூடி ஃப்ரீ ஷாப்ல ஒரு பாட்டில் ஷாம்பெயின் வாங்கித் தரவா? நீ உன் பாய்ஃப்ரென்டோட ஸெலிப்ரேட் பண்ண வசதியா இருக்கும்,” என்றேன், ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி.

“வேண்டாங்க! அவர் ரொம்பப் பொஸஸ்ஸிவ். கொஞ்சம் சந்தேகப்பிராணி. அதுக்கு என் மேல உள்ள காதல் தான் காரணம். தவிர, நாங்க ரெண்டுபேருமே வெள்ளை ரம்மைத் தவிர வேற எந்த மதுவையும் தொடறதில்லை.”

எனக்களிக்கப்படிருந்த பாஸ்போர்டில் எனது பெயர் மதுக்கர் விஷ்ணு என்பது நினைவுக்கு வந்தது.

“என் முதல் பெயர் விஷ்ணு என்றாலும், குடும்பப்பெயரான மதுக்கர் ங்கற பெயரை சுருக்கி எல்லா நண்பர்களும் நண்பிகளும் “மது” ன்னு தான் கூப்பிடுவாங்க. என்றைக்காவது என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணினா, மெதுவா, மிருதுவா மாதுக்களத் தொட்டு, மதுவை விட அதிக போதையை ஏற்படுத்தற கவிதைகளை பெட்ரூம்ல ஸ்ருதியூட பாடுவான் இந்த மது,!” மீண்டும் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி, டாடா சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவளது கலகல சிரிப்பு என் காதுகளுக்குக் கொஞ்சம் கிளுகிளுப்பை ஊட்டியது.

பாதுகாப்பு சோதனையை முடித்து உள்ளே சென்றேன்.

இடது புறம் சுவர் ஓரத்தில் பல தர உணவுகளுள்ள ரெஸ்டர்ன்ட்களும், அவற்றின் ஓரத்தில் புகை பிடிக்க ஒரே ஒரு சின்ன அறையும் உண்டு.

ஒரு காகிதக் கோப்பயில் டிக்ரி காப்பியை வாங்கி, புகைக்கும் அறைக்கு வெளியே உள்ள சிகரெட் கடையில் க்ளாஸிக் மைல்ட்ஸ் ஒரு பாக்கெட்டை வாங்கி, உள்ளே சென்றேன். அங்கு ஒரே ஒரு சுமார் 50 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரர் – வெள்ளை நிற உயர் ரக காதியில் தைக்கப்பட்ட, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிடித்தமான யூனிஃபார்ம் என அழைக்கப்பட்ட ஜிப்பா-பைஜாமா உடையில் புகைத்துக் கொண்டிருந்தார். மேஜைமீது என்னிடமுள்ளது போன்ற க்ளாஸிக் மைல்ட்ஸ்.

சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் நெருப்பளிக்கும் மின்சார இயந்திரத்தை நோக்கி நகரும் என்னைத் தடுத்து, தங்கத்தில் செய்யப்பட்ட கார்ட்டியர் லைட்டரைத் தட்டி சிறு ஜ்வாலையை – நான் புகைக்க அளித்து உதவினார்.

“தைரியமா தங்க லைட்டரோட ட்ராவல் பண்ணறீங்க? இங்க உள்ள காவல்துறையினர் பிடிங்கிட்டா பெரிய நஷ்டமாயிடுமே!”

“மாட்டிக்காம இருக்க ஒரு ஸிம்பிளான நல்ல வழி இருக்கு. ஸாக்ஸுக்குள்ள, பாதத்துக்குக் கீழ லைட்டரை வெச்சு, ஷூவை மாட்டிக்குவேன். எங்க தேடினாலும் கிடைக்கது. ஷூவுல மெட்டல் பக்கிள்ஸ் இருக்கு. கண்டே பிடிக்கமாட்டாங்க. இட் வர்க்ஸ் எவரி டைம்,” என்றார்.

விமான நிலையப் பாதுகாப்பு முறையில் “பா” கூட அறியாத அப்பாவி ஸி ஐ எஸ் எஃப் வீரர்களை நினைத்து நகைத்தேன்.

“ஸ்மோக்கர்ஸ் ஆஃப் தி வர்ல்ட், யுனைட்!” என்றார் வெள்ளைக்காரர்.

பல தசாப்தங்களுக்கு முன், “ஸ்மோக்கர்ஸ்” என்ற சொல்லுக்கு பதிலாக “வர்கர்ஸ்” [உழைப்பளிகள்] என்ற சொல்லுடன் லெனின் சொன்ன சொற்றொடர் உலகப் பிரசித்தி பெற்றது.

அவரது கையில் தலையணை சைஸில் ஒரு பெரிய புத்தம். வலது கால் அருகில், கார் நீல நிறத்தில் ஒரு கனமான வுயிட்டான் சூட்கேஸ்.

“உங்க புதுமொழியை ஒரு காலத்துல லெனின் உழைப்பாளிகளை ஒற்றுமைப்படுத்தற நோக்கத்துல சொன்னார்னு நினைவு. கம்யூனிஸம் உங்களுக்குப் பிடிக்குமோ?” என வினா எழுப்பினேன்.

“தனக்கு லாபத்தை ஏற்படுத்தித் தர்ற, ‘வர்க்கர்ஸுக்கு, உழைப்புக்கேத்த ஒழுங்கான சம்பளத்தை, முதல் தேதி தவறாம குடுக்கற எல்லா “நல்ல தொழிலதிபர்களை’ சில பேராசை பிடிச்ச பைத்தியக்கார வியாபாரிங்க, ‘தொழிலைக் கெடுக்க வந்த புதிய கம்யூனிஸ முதலாளிகள்னு’ வெய்யறாங்க. வர்க்கர்ஸை அதிகமாப் பிழிஞ்சு எடுக்கற பழக்கத்தைச் செய்யற நாடு சீனா தான். அது ஒரு முழு முதலாளித்துவக் கொள்கையைப் பின்பத்தற பித்தலாட்டக் கம்யூனிஸ நாடு. இது என்னோட கண்டுபிடிப்பில்ல. எங்க கம்பெனியோட சேர்மன் ஸர் கம்மிங்ஸ் மான்ஸ்ஃபீல்டு சொன்ன பொன்மொழி,” என்றார் அந்த மனிதர்.

“உங்க கம்பெனி என்ன தயாரிக்குது?”

“நல்ல வியாபாரப் பழக்கங்களைத் தயாரிக்குது. உலக அரசியலும் சரி, அரசியலை அரைத்து அழிக்கும் பயங்கரவாதிகளும் சரி, ஒரே மாதிரியான செயல்முறையைத் தான் கையாளறாங்க. பயங்கரவாதம் உருவாகி வளர இது ஒரு முக்கிய காரணம். ஒரு விதத்துல சொன்னா, இந்த மனப்பான்மை தான் பயங்கரவாதத்துக்கான ஊற்றுக்கண். அதை வற்ற வைக்கணும்னா, நல்ல, நாணயமான, ஆனா லாபம் சம்பாதிக்க உபயோகமான வியாபரப் பழக்கங்கள உலகத்துல எல்லா பெரிய தொழிலதிபர்களும் கத்துக்கணும். அப்படியானவர்களை உருவாக்கி அவங்க வியாபாரத்தை வளரச் செய்யற ஸ்தாபனத்துல தான் நான் வேலை செய்யறேன். எங்க கம்பெனி பெயர் யூ ஜி ஐ ஐ – யூனிவர்ஸல் ஜெனரேட்டர்ஸ் ஆஃப் இண்டெலிஜன்ஸ் இன்கார்ப்பரேட்டட். எங்க ஐடியாவைக் காப்பி அடிச்சு இந்தியாவுல கூட ஒரு அமைப்பு இருக்கறதாகக் கேள்விப்பட்டேன்.”

“இந்தியக் கம்பெனியின் பெயரென்ன? அது உங்களப்பார்த்து சட்ட விரோதமா காப்பி அடிச்சுதுன்னா அதும்மேல ஆக்ஷன் எடுக்க வேண்டியது தானே!”

“அதெல்லாம் முடியாது, நண்பரே. அந்தக் கம்பெனி எங்க பெயரோட இனிஷியல்ஸை தலைகீழா வெச்சிருக்காம். அதாவது ஐ ஐ ஜி யு.”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“பல நல்ல காரியங்களைச் செய்யற ஐ ஐ ஜி யூ வை  நாங்க ஏன் டிஸ்டர்ப் பண்ணணும்? தவிர அது மாதிரி எதுவும் செய்யறது கஷ்டமான காரியம். ஏன்னா, அதை நடத்தறது இந்திய உளவுத்துறைன்னு நான் கேள்விப்பட்டேன்,” என்றார் அவர்.

எனது ஸப்த நாடிகளும் ஒரே நேரத்தில் ஒடுங்கின.

-தொடரும்

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “உளவுகாத்த கிளி – 11”

 1. Dear Sir,

  Olavu kattha killi will surpass even hitchcock suspense movies. It was a breathtaking novel and the writer has wonderfully penned it in his own inimitable style. The story amply demonstrates that nothing is above suspicion, including the Intelligence. There is a old saying in Tamil, “Veliye payirai meyum kathai. Entha putthilla enna pambu irukkum endru theriyathu. The story has taught us that we should we prepared for the eventuality and “you too Brutus like conspiracies’. Our Bollywood and Hollwood thriller will pale into insignificance before such mudslinging.
  Keep up the good work.
  Thanks and regards,
  Venu

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s