உளவுகாத்த கிளி – 9

முந்தைய அத்தியாய்ங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

என்னோட பாஸ் ஸின்ஹாவுக்கு ஃபோனப்போட்டேன்.

“வனிதா…அவ… பேரு என்னன்னு நமக்குத் சரியாத் தெரியாது… கொஞ்சம் நேரத்துக்கு முன்னால … அவ தன்னோட பெயரை சிவபுண்ணியம்னு சொன்னா… கோட் நேம் அமேலியா லூயிஸ்னும் சொன்னா. வேற ஒரு பெரியத் தகவலச் சொல்லிகிட்டே இருக்கறப்ப, அவளப் போட்டுத்தள்ளிட்டாங்க. அவ இப்ப ஒரு இருட்டான குருட்டு முட்டு சந்து ஆயிட்டா சார்!”

அடுத்த ரெண்டு நிமிஷம் நான் சொன்னதை அவர் இடைமறிக்காமல் கேட்டார்.

“முதல்ல ஆக வேண்டியதைச் செய்வோம்,” என்று கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார்.

நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீடியாக்கள் கவனிக்காம இருக்க நாங்கள் ஏதேனும் திசை திருப்பும் திரிசமன்  வேலையைச் செய்து விடுவது உண்டு.

அதற்காக்க் கிளமிபினேன்.

சென்னையில “பறக்கும் ரயில்” எனும் வெள்ளையானையை 80களில் துவங்கினார்கள். பீச் ஸ்டேஷனிலிருந்து வேளச்சேரி வரை – பக்கிங்ஹாம் கால்வாய் மேல் பெரும்பாலும் ஜன நடமாட்டமே இல்லாத நிலயங்களைக் கொண்ட வண்டவாளமான இரட்டை ஜோடி மின்சாரத் தண்டவாளம் அது. காலையிலும் மாலையிலும் ஆஃபீஸ் நேரங்களில் பயணிகள் கொஞ்சம்போலத் தென்படுவார்கள். மற்றடி, அந்த ரயில் நிலையங்களின் அடித்தளங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சவது முதல், கஞ்சா, அபினி பரிவர்த்தனை, , கொலை, கற்பழிப்பு, சூதாட்டம், கடத்தல் பொருள் பதுக்கல, விபச்சாரம் என சகல விதமான “திருவிளையாடல்களும்” நடக்கின்றன. அவற்றின் பூதாகார கேந்திரங்களின் பரப்பளவும், அவற்றின் லொக்கேஷனும் இத்திருப்பணிகளுக்கு உதவுகின்றன. 87முதல் கணக்கிட்டால், மக்கள் குறைந்த பட்சம் ரூ.45,000 கோடிகள், கண்டம், தண்டம்.

மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள, எனக்கு ரேடியோவில் பாட்டுக் கேட்கும் பழக்கம் உண்டு.. காரை ஸ்டார்ட் பண்ணின உடனே சென்னை ஆல் இந்தியா ரேடியோவின் எஃப் எம் கோல்ட் நிலையத்தின் பொத்தானை அழுத்தினேன். தோடி ராகத்தில் தியாகப்பிரம்மம் இராமபிரானைத் தெலுங்கு மொழியில் புகழ்ந்து இயற்றிய – “வெடலனு கோதண்டபாணி…ராமா…” கவிதையை, யாரோ, ஏதோ ஹைதர் காலத்தில் பாடியதை மறு ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள்..

சின்ன வயதில் சங்கீதக் கச்சேரிகளை ‘சக்கேரி’ எனக் கிண்டலடிக்கும் பழக்கமுள்ள நான், இந்தப் பாட்டைத் திரித்து … “ராமா, உன்னோட தண்டபத்துல ஆணிடா…” ன்னு அசட்டுத் தனமான போர் அடிக்கற ஜோக் சொல்லிச் சிரித்தது  நினைவுக்கு வந்தது.

சென்னையின் பறக்கும் ரயில் நிற்கும் நிலையங்கள் பொருளாதார ரீதியான இந்தியாவோட தண்ட-மண்டபங்களுக்கான மிகவும் மோசமான எடுத்துக்காட்டுக்கள்.

அவற்றுள் எவனும் சீரியஸாக கவனிக்காத ஸ்டேஷன் தான் லைட் ஹவுஸ் என்கிற கலங்கரை விளக்கம் டெர்மினல்.

அதிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தமிழக காவல்துறை தலைமைபீடம். அதனை அடுத்து ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம்,  கண்ணுக்கு எட்டற தூரத்தில் பீச் ரோடு என்கிற காமராஜர் சாலை, வல்லப் பாய் பட்டேலின் சாயலில் வடிக்கப்பட்ட காந்தி சிலை, ஸிட்டி மால் எனும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இத்யாதி. எல்லாமே உச்சகட்டப் பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள்.

அப்போது மணி மதியம் சுமார் 3-45.

காரை ராதாகிருஷ்ணன் சாலையில் ப்ரெஸிடன்ட் ஹோட்டல் பார்க்கிங்கில்  நிறுத்தி, அதன் டிக்கியிலிருந்து 3 கிலோ எடை உள்ள பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். 163-ஆவது வினாடியில் ரயிலடியின் அடிவாரத்தை அடைந்தேன். அங்கே ஸி ஸி டி வி காமிராக்கள் இல்லை என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன். அந்த நேரத்தில் அந்த நிலையத்தின் கீழ்தட்டில் யாரும் இல்லை. மனிதக் கழிவுகள் நிரம்பிய ஒரு நாறும் மூலையில், ஒரு டைமரைப் பொருத்தி, அதன் டிக்-டிக்-டிக் துவக்கி, ஏதோ குப்பையை வீசுவது போல எறிந்து, வெளியேறினேன்..

திரும்பி காருக்குள்ள ஏறி அதை ஸ்டார்ட் செய்யும்போது, அந்த பாம்ப் வெடித்தது.

பக்கத்தில் இருக்கறவர்கள் அத்தனைப்பேரின் காதுகளும் பல வினாடிகளுக்கு “ங்கொன்ன்ன்ன்ய்ய்ய்ய்ய்” என ரீங்காரமிடும் என்பது எனக்குத் தெரியும். எனக்கே அந்த நிலை ஏற்பட்டது. அருகிலுள்ள ஒண்ணு ரெண்டு ஈயோ, காக்காயோ செத்திருக்க வாய்ப்புண்டு. சுவரில் ஒன்றிரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். மற்றபடி எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது.

அதன் பாதுகாப்பான தமிழகக் காவல்துறை தலைமையகம் கல்லெறியும் தூரத்தில் இருப்பதாலேயே, விரைவில் காக்கிச் சட்டைக்காரர்களும், மீடியாக் காமிராக்களும் ஈக்களைப் போல அந்த ரயில் நிலையத்தைமொய்க்கும் நிலை உருவாகும். உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் மிகவும் கவலை அடைந்த முகபாவத்துடன், “பயங்கரமான ஒலியுடன் இந்த வெடிப்பு நடந்துள்ளது. ஃபாரன்ஸிக் ஆட்களும், பாம்ப் டிஸ்போஸல் ஸ்க்வாடும் ஆராய்ந்த பிறகு தான் எதையும் கூற முடியும்,” என வழக்கம்போல ஆலாபனை செய்துவிடுவார். மைக்குகளை நீட்டும் அரைவேக்காடு வாத்து மடைய ரிப்போர்ட்டர்களுக்கு அந்த விடை போதாதது எனத் நேயர்கள் நினைக்கும்படி, சம்பவத்திற்கு, காது, மூக்கு, காலில் வீக்கம், தலையில் விக், அருகில் நாலு பெண்களுக்கு எடுத்தப் பிரசவ வலி, 4 காக்காய்களின் அகால மரணம்… என இஷ்டத்துக்கு ரீல் விடுவார்கள். ஜனங்களும் தத்தம் வீடுகளில் வாயைப் பொளந்து கொண்டு அதையே கவனிப்பார்கள்.

இந்தக் களேபரத்தால், நாங்கள் செய்யவிருந்த வேலைக்கு இடையூறே இல்லாத நிலையை உருவாக்கிவிட்டேன்..

சென்னையில 14 இடங்களில் நமது நாட்டின் பாதுகாப்புப் படைகள் – மாறுவேடத்தில் அடுத்த 12 நிமிஷங்களுள் செய்யவிருந்த ரெயிடுகளை எவனும்/எவளும் கவனிக்கமாட்டார்கள்.

சட்டத்தை சத்தத்தால மீறி, தண்ட-தண்டப-மண்டபத்தில் ஆணி அடித்து விட்டேன்.

டாக்டர் நடேசன் சாலை வழியாக  ராயப்பேட்டையை அடைய எனக்கு சரியாக 6 நிமிடங்கள் பிடித்தன.

அரசாங்க மருத்துவமனைக்கு அருகே பீட்டர்ஸ் சாலையில் ரத்னா ஆஃப்ஸெட்னு ஒரு பெரிய அச்சகம். அதில் முன்பு வேலை செய்த ஒருவன் – காணாமல் போனதாக நம்பப்பட்டது. அவன் சின்னத் திருட்டுக்களில் ஈடுபட்டவன். முன்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுவன். அவனது நிஜப்பெயர் தருமலிங்கம் யோகேஸ்வரன். இலங்கையின் கிளிநோச்சி பகுதியைச் சேர்ந்தவன்.

காவல்துறைக்குத் தெரிந்த பெயர் தாமஸ் ஃபிலிப்.

ரத்னா ஆஃப்ஸெட் ப்ரெஸ்ஸுக்கு பின்புறம், ஒரு சந்தில் 11 மேன்பாட்ஸ் [MANPADS] எனும் விமானங்கள 11 பறந்து தாக்கி அழிவக்க வல்ல தோள்களிலிருந்து ஃபையர் பண்ணக்கூடிய ஏவுகணைகள் அவனது பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

அவனது நாசவேலைக் கைங்கர்யங்கள் தொடரும் விஷயம் எங்கள் போன்றோருக்குக் கூடத் தெரியாது.

இவனது செயலபாட்டிற்கும், ரத்னா ஆஃப்ஸெட்ங்கற கம்பெனிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றாலும், பயங்கரவாதிகள், சந்தெகமே வராத “கவர் கதைகளை” பயன்படுத்தும் பொருட்டு ரத்னா ஆஃப்ஸெட்டைப் பயன்படுத்த எண்ணினார்கள். அங்கு பல வார இதழ்கள், மாதப் பத்திரிகைகள்  அச்சாகின்றன. விசாரணை என்ற ஏதேனும் ஒரு நிகழ்வு அங்கு ஏற்பட்டால், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பு என, பயகரவாதிகளிடம் நக்கி உண்ணும் பத்திரிக்கையாளர்கள் கூச்சலை ஆரம்பித்து விடுவார்கள்.

விமான நிலயங்களின் வெளிச்சுவர்களு அருகில் நின்று எந்த கத்துக்குட்டிப் பயங்கரவாதியும், ஏதாவது ஒரு பறக்கத் துவங்குகிற பயணிகளைத் தாங்கிய ரக்கை கட்டிய பஸ்ஸோட பின்புறத்துலேந்து வர்ற வெப்பைப் காற்றை நோக்கி பெரிசாக் குறி எதுவும் பார்க்காம மேன்பாட்ஸ் ஏவுகணையின் குதிரையை அழுத்தினால், , அது வெப்பக்காற்றை மோப்பம் பிடித்து அடுத்த 8 சேக்கன்டுக்குள் ப்ளேனில் உள்ள எல்லோரையும் விசா இல்லாமல் பரலோகத்தில் குடிபெயரச்செய்து விடும். நமது மாநில அரசுகளின் கண்ட்ரோலில் உள்ள காவாலிகளாகிவிட்ட காவல்துறையினருக்கு இது பற்றிய எந்த ஐடியாவும் கிடையாது.  பாதுகாப்பு என்கிற பெயரில் ஃபோனில் ஊர்க் கதை பேசிகிட்டு இருக்கும் வயிறு தள்ளின கான்ஸ்டபிள்கள் கையில் ஒரு கம்பைக் கொடுத்து “பாதுகாப்பை பலப்படுத்த” வி வி ஐ பி க்கள் செல்லும் பாதைகளில்கா வல்துறை உயர் அதிகாரிகள் நிற்கச் செய்வார்கள். அதனாலேயே சென்னை பாதுகாப்பாக இருப்பதாக தொலைக்காட்சிச் சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

உருப்படியான வேலைய எங்களைப் போன்றவர்கள் செய்து முடித்தால்தான் உண்டு.

மேன்பாட்ஸ்ங்கற ஏவுகணை [விரிவாக்கம்: மேன் போர்டபிள் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம்] 70களில் தயாராயிற்று. இதன் ரஷ்ய ப்ரான்ட் – எஸ் ஏ 7 ஐப் பயன்படுத்தி ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள கேன்யா நாட்டில் ஒரு இஸ்ரேல் விமானத்தைச் சுட்டு விழுத்த பயங்கரவாதிகள் 2002ல முயற்சி செய்தார்கள். அதை இஸ்ரேலோட மொஸ்ஸாத் தடுத்தது. அத்துடன் அந்தச் செயலில் ஈடுட்ட 28 பேரிடமிருந்து  எல்லாத் தகவல்களையும் கறந்த பிறகு, கை கால்களில் பல முறை குண்டாந்தடிகளால் தாக்கி எலும்பு முறிவுகளை கதறக்கத்ற ஏற்படுத்தினார்கள். இறுதியாக, ஒவ்வொருவர் மீதும் அரை டஜன் குண்டுகளை துப்பாக்கியால் சுட்டு-செலுத்தி, தவணை முறையில் கொன்றார்கள். முதலில் கால் முட்டியில் சுட்டார்கள். அந்த வலியில் துடிக்கையில் ஒரிரு இஸ்ரேலி வீர்ர்கள் அதை இடரிச் செல்லும்போது, வலியால் கத்துபவர்களைக் கிண்டல் செய்து சிரித்தனர். பின்பு அடுத்த முட்டி, அடுத்த கை, கால், இறுதியில் கண்கள். இந்த கோரக் காட்சிகள் லைவாக விடியோக்களில் படம் பிடிக்கப்பட்டு, அவற்றின் நகல்களை இஸ்ரேலை எதிர்க்கும் அனைத்துப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சிவன் கோவில் விபூதி பிரசாதம் போல இலவசமாக அனுப்பி வைத்தார்கள், என ஒரு சில “புலனாய்வு ரிப்போர்ட்டுகள்” கூறின.

இச்செயலுக்கு அமெரிக்காவின் உந்துதல் தான் காரணம் என சில அடிப்படை வாத இஸ்லாமியம் பேசும் பயங்கரவாதக் குழுக்கள் “பழிவாங்க” முற்பட்டன. 2003 இல் அமெரிக்காவின் நியூ ஜெரிஸி மாநிலத்தில் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த, அங்குள்ள அதிருப்தியாளர் குழுக்களுக்கு அளித்துவிட எத்தனித்தனர். இந்த சதித்திட்டத்தை ஆரம்பகட்டத்திலேயே மோப்பம் பிடித்த இஸ்ரேலின் மொஸாத் – அதன் அனைத்துத் தகவல்களையும் அமெரிக்காவின் உளவுத் துறைக்கு அளித்தது. தங்கள் பங்கிற்கு, உளவுத் துறையினர் அதிருப்தியாளர்கள் போல வேடம் பூண்டு – ஏவுகணைகள் ‘வாங்க’ முன்பணம் கொடுத்து, அந்த நாசவேலை கும்பலை வளைத்துப்பிடிக்க உதவினர்.. ஹாஸ்ய எண்ணம் சற்று அதிகமாக உள்ள ஒரு ஸி ஐ ஏ அதிகாரி – இந்த பயங்கரவாதிகளை ஒரு பிரத்யேக விதத்தில் தண்டித்தார். ஒரு மைதானத்தின் நடுவில் மின்சார இணைப்புடனான இரும்புத் தூணை நட்டு, அதில் ஒவ்வொரு பயங்கரவாதியையும் கட்டச் செய்தார். மின்சார உதவியுடன் இரும்புத் தூணைச் சூடேறச் செய்தார். அப்போது அடித்த ஷாக்கில் பயங்கரவாதி நெளியும்போதே தூணின் சூட்டைத் தேடி, அந்தப் பயங்கரவாதிகள் கொண்டுவந்த ஏவுகணைகாளின் குதிரையை தட்டியதால், ஷாக்கில் நெளியும் ஒவ்வொரு பயங்கரவாதியையும் ஏவுகணை வெடிக்கையில் தீப்பிழம்பாகிச் சிதறச் செய்த்தார்.’ ஒவ்வொருவர் கொல்லப்படுவதையும் – அவரது சகாக்களைப் பார்க்கச் செய்தார். அந்த கொடுரக்காட்சியைக் காண்கையில் அக்குழுவில் பலர் அச்சத்தால் மல-ஜல விஸர்ஜனங்கள் செய்தனர். இந்த வீடியோவும் பயங்கரவாதக் குழுக்களுக்குக் காணிக்கையாக அனுப்பப்பட்டதாக செய்திகள் உண்டு.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, பல்லாயிரம் கோடி டாலர்கள் செலவில் எல்லா மேற்கத்திய நாட்டு விமான நிலையங்களுக்கும் இது போன்ற அபாயம் நெருங்காதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இந்தியாவில் மோடி அரசு பதவி ஏற்றபின்பு தான் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கும் என அக்காலத்தில் யாரும் கனவு கூடக் காணவில்லை.

உலகம் முழுதும் சுமார் 1,60,000 இந்த ரக இயந்திர அழிவுப் பறவைகள்  பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களின் ரகசியக் கூடுகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன.

இதன் மற்ற “பாப்புலர் ப்ராண்டுகள்” சீனாவின்   HN-5, மற்றும் அமெரிக்காவின் ஸ்டிங்கர் ரெட் ஐஸ் [சிகப்புக் கண்கள்].

ரகசியமாக, விடுதலைப் புலிகளின் ஒரு சில தலைவர்களும் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உதவியுடன் இந்த ரக 97 ஏவுகணைகளை சென்னையில பல இடங்களில் “ஸ்டாக் பண்ணி இருந்த” விஷயத்தைத் தான் வனிதா என்னிடம் – கொல்லப்படும் முன்பு கூறினாள்.

என்னோட கார் கடற்கரை சாலையிலிருந்து பீட்டர்ஸ் ரோட்டில் நுழைந்து ராயப்பேட்டை ஹை ரோட்டை நெருங்கும்போது, காலேஜ் பசங்களைப் போன்ற ஜீன்ஸும் டி ஷர்ட்டுக்களையும் அணிந்திருந்த எங்க கமான்டோஸ், ஃபிலிப்பையும் அவனது சகாக்களையும் “அன்பாக” தோள்கள் மீது கைபோட்டவாறு சிரித்துக் கொண்டே தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருதார்கள். படையினர் மூன்று நபர்கள், 11 மேன்பாட் ஏவுகணைகளை காய்கறி மூட்டைகள் போலச் சுமந்து கொண்டு ஏதோ ஜோக் அடித்துக்கொண்டு நடந்து செல்வதுபோல நடித்தவாறு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத அம்பாஸிடர் வண்டிகளில் ஏற்றுவதை கண்டேன்.

யாரும், சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் பிடிபட்டவர்களுள் ஒருவன் திடீரெனத் திமிரி, தன்னை விடுவித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பர்ஃபெக்ட் டைமிங்கில் காரை நிறுத்தி அவனைப் பிடித்து, சக்காக்களிடம் ஒப்படைக்கும் முன், ஒரே ஒரு கராத்தே வெட்டை அவனது கழுத்துப்பட்டினியில் அளித்தேன். அவன் கீழே சாய்வதற்குள் எனது தோழர்கள் அவனை வண்டியில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.

நான் ஃபாலோ பண்ணினேன்.

கிண்டி தொழிற்பேட்டையில் பாழடைந்த மண்டபங்கள் போன்ற பல கட்டிடங்கள் உண்டு.

அவற்றில் இரண்டின் வெளிப்புறத்தோற்றத்தை மாற்றாமல், உள்ளே இதுபொன்ற சில “சித்து வேலைகளுக்கு” நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

பொதுவாக, சினிமாப்படங்களில் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட உதைத்து, கைகால் எலும்புகளை உடைத்து உண்மையை வரவழைப்பதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு அளவுக்குப் பயன் உண்டு என்பது உண்மை தான்.

ஆனால், தனது கொள்கைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடைய பயங்கரவாதிகளை எவ்வளவு அடித்து உதைத்தாலும் உண்மையை வரவழைக்க முடியாது. அப்படியே அவர்களைப் பேச வைத்தாலும், அவர்களின் கூற்றில் பல பொய்கள் மறைந்திருக்கும். அப்பொய்களை நம்பி – பல முறை – பல நாடுகள் தவறான முடிவுகளை எடுத்து பின்னர் விழித்ததுண்டு.

நாங்கள் சினிமாவின் சில விஷயங்களை புத்திகூர்மையுடன் கையாளும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். அத்துடன், மனிதர்களின் பயம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, காரியத்தைச் சாதிக்கவும் கற்றிருக்கிறோம்.

கமலஹாசன் நடித்து 1995ல் வெளிவந்த “குருதிப்புனல்” படத்தில் பணிபுரிந்த சில ஒப்பனைக் கலைஞர்களை வரவழைத்து, எங்களுள் ஒருவருக்கு பலத்த அடி விழுந்து, கண், மூக்கு, வாய், தாடை, தலை ஆகிய இடங்களிலிருந்து இரத்தம் வழிந்ததுள்ளது போல ஒருவரை தயார் செய்தோம்.

பயங்கரவாதிகளைத் தாங்கி வந்த வண்டிகள் கிண்டியில் எங்களது ஒரு மறைவிடத்தில் நின்றன. அவை பயணிக்கும்போதே எங்களுள் நன்றாக நடிக்கத் தெரிந்த ஒருவர் மேக்கப்புடன் தயாரானார்.

மொத்தம் 97 ஏவுகணைகளும் கைபற்றப்பட்டு, 34 பேர் – இதில் 7 பெண்களும் அடக்கம் – எங்களிடம் சிக்கி இருந்தார்கள்.

அவர்கள் ஒரு அறையில் அமரவைக்கப்பட்டனர்.

நான் உள்ளே சென்று, எல்லோருக்கும் பிரியாணிப் பொட்டலங்களை வழங்கினேன். அவற்றில் விஷம் கலந்திருக்கவில்லை என அவர்களுக்கு நம்பிக்கை வர, அவற்றிலிருந்து சில விள்ளல்களை எடுத்து உண்டேன்.

அவர்கள் சாப்பிட்த் துவங்கிய பின்பு, “பாகிஸ்தான் பயங்கரவாதி வேடத்தில் எங்கள் நடிகர் தோழர் இரத்தம் சொட்டச்சொட்ட சித்திரவதை அனுபவித்த்தவராகத் தத்ரூபமாகத் தெரிந்த தோழர்”  அறைக்கு வரவழைக்கப்பட்டார்.

“விஷயத்தைச் சொன்னா, நைட்டுக்கு ஸ்காச் விஸ்கியோட சைனீஸ் அசைவ நூடுல்ள் சாப்பிடக் கிடைக்கும். சொல்லல்லன்னா, இதோ, இந்த நபரோட கதிதான். பாவம், பாகிஸ்தான்லேந்து இங்க பாம்ப் வைக்க வந்தான். ரொம்ப நேரம் வலிபொறுத்தான். ஆனால், எல்லாருக்கும் இந்த விஷயத்துல ஒரு லிமிட் உண்டு. லிமிட்டை நாங்க தாண்டினோம். இவன் விஷயத்தைப் பூரா கக்கினான்,” என்றேன்.

நான் பேசும்போது ரகசியக் காமிராக்கள் சிக்கிக்கொண்டுள்ள எல்லா பயங்கரவாதிகளின் ரியாக்ஷனையும் ஆராய்ந்தன. எங்களுள் மனோதத்துவ அடிப்படையில் முகபாவாங்களின் மாறுதல்களை வைத்து அச்சத்தின் லெவலும், செய்திகளைச் சொல்ல எந்த அளவுக்கு எந்த நபர் தயாராக இருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர்கள் உண்டு. அவற்றை எங்களுள் கைதேர்ந்த அதிகாரிகள் இடைவிடாது கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன, தம்பி, எங்க விருந்தோம்பல் போதுமா? எல்லவற்றையும் சொல்லி முடித்து விட்டாயா?” நான் எனது “விசேஷக் கைதியின்” முகத்தில் லேசாகத் தட்டிக் கேட்டேன்.

அவனது நடிப்பு அபாரமாக இருந்தது.

வலியால் துடித்து அலறினான்!

“நீயெல்லாம் மனிஷத் தன்மையே இல்லாத காட்டு மிருகம்!”

எனது உதவியாளர் ஒருவர் வந்து ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார்.

அது எங்களது முன்பே தயாரித்த ஸ்க்ரிப்டின் ஒரு பகுதி.

“இவனிடமிருந்து எல்லாமே வந்திரிச்சி. இனி இவன் வெறும் மனிதச் சக்கை! வெரிகுட். இவன் வெச்ச பாம்ப்கள் காரணமா உன்னோட குழந்தைதானே செத்திச்சி?” எனது இன்னொரு சகாவைப் பார்த்துக் கேட்டேன்.

“யெஸ் சார்!”

“இவனுக்கு என்ன தண்டனைன்னு நீ முடிவு பண்ணு!”

அந்த “கைதியை” மிகவும் வெறுப்புடன் பார்ப்பதுபோன்ற பாசாங்கு செய்த எனது தோழன், “என் குழந்தையோட மூளை சிதறிச்சி, சார். அதே நிலை…”

“செஞ்சிட்டாப் போவுது.  கொண்டாப்பா அந்த ஆஸிடை,” என்றேன்.

“கைதியாக நடித்த வனின் தலையில் மண்டைஓட்டின் பகுதிகள் தெரிவதுபோலத் தென்பட ட்ரை ஐஸ் [ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரம் ரசாயனம்] ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஆஸிட் போலத் தெரிந்த கொக்கோலா கலந்த தண்ணீரை ஊற்றினேன். ட்ரை ஐஸ் “புகைந்தது”. “கைதி” அலறினான். ட்ரை ஐஸின் கீழே ஒருதரம் க்ளிப்புடன் நன்றாக அழுத்தப்பட்டு – தக்கபடி “பதனிடப்பட்ட வெள்ளை ஸ்பாஞ்ச் – ரிலீஸாகி, மூளை வெளியே வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கிற்று! “கைதி” துடிதுடித்து  “இறக்கத் துவங்கினான். சரியான டைமிங்குடன் தண்டனையைப் பரிந்துரைத்த எனது சக தோழன் வாந்தி எடுப்பதுபோல நடித்தான்.

“இந்த அழுக ஆரம்பிக்கற பொணத்தை எடுத்துப்போங்க! நீ மனம் வந்த மட்டுக்கு, இவன் பொணத்தும்மேலயே வாந்தி எடு! மத்தவங்க சாப்பிடும்போது … பாவம் … அது அருவருப்பாக இருக்கும்! சோறு இறங்காது,” என்று நான் ‘பரிவுடன்’ சொன்னேன்.

ட்ராமா ஓவர். எனது சகாக்கள் “செத்த கைதியைக்” கொண்டு சென்றனர்.

நாலு பேர் விஷயத்தைக் கக்க ரெடி என முன்டியடித்துக்கொண்டு கத்தினார்கள்.

சக தோழன் ஒருவனிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யச் சொல்லி நான் வேறு அறைக்குச் சென்றேன். அங்கு, “வாந்தி எடுத்த” அதிகாரி மோஸஸ், இறந்து கொண்டிருந்த தோழன் அப்பாஸின் மேக்-அப்பைக் கலைக்க உதவிக் கொண்டிருந்தான்.

“அந்த ஆளைப் பண்ணின மாதிரி எங்களையும் பண்ணிடாதீங்க சார். நாங்க எல்லாத்தையும் சொல்லிடறோம்,” என்ற கோரஸ் அடுத்த அறையிலிருந்து ஸ்பீக்கரில் கேட்டது. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் நிஜமாகவே வாந்தி எடுத்தனர்.

“சீக்கிரமே இது மாதிரி பர்ஃபார்மன்ஸஸுக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல ஆஸ்கார் பரிசு ஒண்ணை உருவாக்கணும். நீங்க  நடிப்புல காட்டின வாந்தி அங்கே நிஜமான வாந்தியை வரவழைச்சிரிச்சி!”

நான் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர்.

எங்களிடம் சிக்கி இருந்த பயங்கரவாதிகள் “பாட” ஆரம்பித்தவுடன், அவற்றின் “பல்லவியே” எங்களை மிரள வைத்தது. அவ்வளவு பயங்கரமான திட்டம்.

கமாண்டோஸ் குழுவின் இரண்டாம் லெவல் தலைவன் ரஜ்னிகாந்த் மிஸ்ரா ராமபிரான் மீதான பக்தியில் ஊறியவன்.

“இஸ் தேச் கோ ராம் பசாயே…” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

“இந்த நாட்டை இராமர் தான் காக்கவேண்டும்,” என்பது அவன் சொன்னதன் பொருள்.

தியாகராஜ ஸ்வாமிகள் ஸிம்ஹேந்திர மத்தியம ராகத்தில் இயற்றிய தெலுங்கில், கிட்டத்தட்ட இதே பொருளுள்ள பாடலின் பல்லவி என் நினைவிற்கு வந்தது. “ராமா…நீடு சரணமுலே!”

இவற்றை முழுமையாகக் கேட்டதும், எனது மனசு என்னவோ செய்தது. ஆனால், நான் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒரு திட்டப்படி பணி புரியவேண்டுமென்பதில் எந்த மாற்றமும் இல்லை.

அடுத்த கட்டப் பணிக்குத் தயாரானேன்.

-தொடரும்

Advertisements

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

One thought on “உளவுகாத்த கிளி – 9”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s