உளவுகாத்தகிளி – 8

The latest chapter of my international quality Tamil spy thriller novel

Advertisements

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

திருப்பதி ஃப்ளாட்டினுள் நுழைந்ததும் என்னுடைய பாஸ் ஸின்ஹாவுக்கு ஃபோனைப் போட்டேன்.

“ப்ளடி குட் ஷோ, ஐ ஸே,” என்றார் சுருக்கமாக.

“எனக்கு இதுல எங்கேயோ – அழுகின மீன் வாடை இருக்கற ஃபீலிங் வருது சார்.”

“ஏன்?”

“புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம் ட்ரெயினிங் நாம குடுத்தாலும் ஆரம்பத்துலிருந்தே அவங்க ப்ரிட்டிஷ் உளவு ஸ்தாபனமான எம் ஐ 6 கண்ட்ரோல்ல தான் இருந்தாங்க. அதுக்கு பாலசிங்கம்ங்கற இலங்கைத் தமிழ் பத்திரிக்கையாளர் – முதல்ல கொழும்புல உள்ள ப்ரிட்டிஷ் ஹை கம்மிஷன்ல மொழிபெயர்ப்பாளரா வேலை பார்த்ததுலேந்து, அப்புறம் ப்ரிட்டன்ல போய் செட்டில் ஆனதுலேந்து, பிரபாகரனை அவனோட க்ரூப்ல உள்ள உமா மஹேஸ்வரன் போன்றவங்க விரட்டினதுலேந்து, அவன் டெலோ – குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், ஸ்ரீ சபாரத்தினம் மாதிரி ஆளுங்களுக்காக ஸ்மக்ளிங்க் பண்ணற எடுபிடி வேலை செஞ்சதுலேந்து, பாலசிங்கம் இந்தியா வந்து அவனோட க்ரூப்ப ரீ-ஆர்கனைஸ் பண்ண ஹெல்ப் பண்ணினது வரை ஒரு சங்கிலித் தொடருள்ள ஆதாரங்கள். இந்தியாவ பல நாடுகள் போட்ட திட்டங்களுக்கு ஏற்ப, புலிகள் இந்தச் சக்கிர வியூகத்துல 83ல சிக்க வெச்சாங்க. அவங்க காடர்ஸுக்கு ட்ரெயினிங், ஆயுதம் நம்ம கிட்டேந்து வாங்கினதுல ஆரம்பிச்சு, 1987ல ராஜீவ் காந்தி முட்டாள் தனமா ஜெயவர்த்தனாவோட இலங்கையோட பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டப்பொ ஏதோ நம்மளோட ஒத்துப்போற மாதிரி நடிச்சு … நம்ம ஆயுதங்களால நம்ம படைகளையே தாக்கி … இதெல்லாமே … ஒரு ப்ளானோட நடந்தது. 87ல ஸோவியத் யூனியனுக்கு திரிகோணமலைல இருந்த ஸி ஐ ஏ வோட டவர் மூலமா இந்தியாவ வாச் பண்ணற ஃபெஸிலிட்டீஸத் தகர்க்க ராஜீவுக்கு ஐடியா குடுத்தது மாஸ்கோ. ஆனா, மாஸ்கோவே முழுகற நிலையில இருந்ததும், அந்த டவர்களால பெரிய பயன் எதுவும் அமெரிக்காவுக்கோ ப்ரிட்டனுக்கோ இருக்கல்லன்னும் ராஜீவுக்குத் தெரியாது. வி பி ஸிங் ஆட்சியில நம்ம ராணுவம் அவமானப்பட்டுத் திரும்பிச்சி. நம்ம ராணுவத்தைக் குழப்ப, ஸ்கூல் யூனிஃபார்ம்ல பெண்புலிகளை அனுப்பி, பள்ளிப்பைகள்ள பாம்ப்ஸை டைமரோட வெச்சு நம்ம ஆர்மி ட்ரக்ஸுல தூக்கி போட்டுப் போய், அதெல்லாம் வெடிச்சு, மொத்த விலையில நம்ப பாய்ஸ் அனியாயமச் செத்ததுக்காக நம்ம ஆர்மி ரிடாலியேட் பண்ணினதை, இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களைக் கற்பழிச்சதத் தவிர ஈழத்துல வேற எதுவும் பண்ணல்லங்கற மாதிரி இமேஜை தமிழ் நாட்டுப் பாலிடீஷியன்ஸ் க்ரியேட் பண்ணினாங்க. அதையே மெயிண்டெயின் பண்ணி, 91ல ராஜீவ் கொலையை நியாயப்படுத்த யூஸ் பண்ணினாங்க, பண்ணறாங்க. ஆனா, அந்தக் கொலைனால, போஃபர்ஸ் பீரங்கி ஊழல் புலனாய்வு புல்லாய்வு ஆனதை எல்லாரும் மறந்தாங்க. ராஜீவ் கொல்லப்பட்டதால தான் காங்கிரஸ் 1991 பொதுத் தேர்தல்ல ஜெயிச்ச விஷயம் எத்தனை பேருக்கு நினைவு இருக்கும்? சோனியா அம்மையார் 91லேந்து காங்கிரஸைக் கண்ட்ரோல் பண்ணறாங்களே… மறைமுகமா இந்தியாவுக்கு அரசி ஆனாங்களே … போஃபர்ஸ் ஊழல் காரணமா … அவங்களுக்குக் க்ளோஸா இருந்த க்வாத்ரோக்கி மாதிரி தரகர்கள் அடிச்ச காசு விஷயமும் வெளியே வராம இருக்க வழி வகுத்தாங்க. சோனியாவ ராஜீவுக்கு ப்ரிட்டன்ல கேம்ப்ரிஜ்ல 1965ல இன்ட்ரொட்யூஸ் பண்ணினது கூட ஒரு பாகிஸ்தான் ஐ எஸ் ஐ உளவாளி ஸல்மான் தாஸீர். இதப்பத்தி எல்லாம் எவனும் எழுதறதும் இல்லை, ஒண்ணு ரெண்டு பேர் எழுதினா எவனும் கண்டுக்கறதும் இல்ல. பிரபாகரனோட வலது கரமா இருந்த கருணா புலிகள் இயக்கத்துலேந்து 2004 லேயே வெளியே வந்து இலங்கை அரசோட பாதுகாப்புல கொஞ்ச நாள் கொட்டமடிச்சு, தன்னோட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சீடர்கள் சிலபேரையே கொண்ணு, அதுனால உயிருக்கு கியாரண்டி இல்லாம லண்டனுக்குத் தப்பிப் போய், போதைப் பொருள் வியாபராத்தை பண்ணினதை புலிகளோட லண்டன் கிளை, ப்ரிட்டிஷ்அ திகாரிகளுக்கு காட்டிக் குடுத்திச்சி. 2007 நவம்பர்ல அவன் அரெஸ்டானான். 2008 மார்ச்சுல அவனுக்கு 9 மாசம் கடுங்காவல் தண்டனை விதிச்சாங்க. கிட்டத்தட்ட அதே டயத்துல ராஜீவோட டாட்டர் ப்ரியங்கா நளினியைச் சந்திக்க காலைல டெல்லிலேந்து கிளம்பி, வேலூர் சிறையில அவங்கள மட்டும் சந்திச்சு 14 hoursல திரும்பினாங்க. இது வரை அதுக்கான காரணத்தைச் சொல்லல்ல. ஆனா, ஜூன் 2008 லேயே கருணா இலங்கக்கு ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் ஃப்ளைட்ல வந்தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம் பி ஆனான், ஆகஸ்ட்லேந்து புலிகள் மேல இலங்கை ராணுவத்தோட தாக்குதல் நடந்தது. அதுல புலிகள விட அப்பாவித் தமிழர்கள் சாக – புலிகள் அவங்கள மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தினது தான் காரணம். கரூணாவ இலங்கையில அமைச்சனாக்கப் போறாங்கான்னு நமக்குத் தகவல் இருக்கு. இந்த நிலையில, இந்தத் தகரடப்பா ரெட்டின்னு தன்னை அறிமுகப்படுத்திகிட்டவன் பிரபாகரன் தப்பிச்சிருக்கலாம்னு இலங்கை படைத் தளபதி ஃபோன்சேக்கா சொன்னதை மேற்கோள் காட்டித் தப்பிச்சிட்டான்னு சொன்னான். If that is true, அப்படி திடீர்ன தப்பிக்க யார் உதவினா? அத்தனை வருஷ காலம் பல மேற்கத்திய நாடுகளோட உதவியோட இயங்கின புலிகள் தலைமையை அப்படியே திராட்டுல விட்ருவாங்கன்னு எனக்குத் தோணல்ல. இந்த வேளையில இந்த வனிதா … இதெல்லாமே வேறெதுக்கோவான ஒரு முஸ்தீப்புன்னு நினைக்கத் தோணுது.”

[அதிக தகவல்களுக்கு: http://tsvhari.com/template_article.asp?id=493]

ஸின்ஹா ஒரு பெருமூச்சு விட்டார்.

“இது பத்தி நேர்ல அப்புறமாப் பேசுவோம். ரொம்ப ஸீரியஸான விஷயம். மீன்வைல், இங்கே ஸி ஐ ஏ ஆளுங்களுக்கு சிவகாசி மேட்டரைக் கசிய விட்டுட்டேன். வேற ரூட்ல தமிழகப் போலீசுக்கும் நியூஸ் போயிரிச்சி. எந்த நியூஸ் சானல்ல எப்படிப்பட்ட குந்திரட்டாதித் தனமான செய்திகள் வருமோ தெரியாது. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். நமக்குத் தெரிஞ்ச உண்மையை எவனும் சொல்லப்போறதில்ல!”

“அப்புறம் ஒரு விஷயம், சார் … அந்த வனிதா…”

“எனக்கு ஒரு ஐடியா, விக்ரம். இந்தப் பொண்ணை ஆதாரமில்லாத்ததுனால வெளியே விட்டோம்னு சொல்லி – ராஜமுந்திரிலேந்து ரிலீஸ் பண்ணுவோம். அவள ஃபாலோ பண்ணினா பல உண்மைகள் சிக்கலாம்.”

“தட் ஈஸ் ப்ரில்லியன்ட் சார்!”

“2 நாள் லீவ் போடு. சொல்லறேன்னு தப்பா நினைக்காத … அவ்வப்போது ஃபீமேல் கம்பெனி வேணும்தான் … ஆனா ஒரு டெம்பொரரி அட்ஜஸ்ட்மென்டால என்னவெல்லாம் நேர்ந்ததுன்னு யோசி. பர்மனென்டா ஏதாவது ஏற்பாடு செஞ்சுக்க. மனசு கிளைக்குக் கிளை தாவற குரங்கு. நம்ம தொழில்ல, எந்தக் கிளையில வேணும்னா க்ளேமோர் கன்னிவெடி மறைச்சி வெச்சிருப்பாங்கங்கற டென்ஷன் இருந்துகிட்டே இருக்கும். எனக்கு வேறோரு கால் வரது. யூ டேக் கேர்!”

“எனக்கு நெகிழ்வா இருக்கு. சென்னை போயி கால் பண்ணறேன், சார்!”

அரை மணி நேரம் ஷவரின் கீழ் நின்று ஜில்லுன கொட்டற பாத்ரூம் நீர்வீழ்ச்சியில குளித்துவிட்டு வெளியே வந்து டி வி யைப்போட்டேன். ஏதோ ஒரு சானல்ல ஏதோ ஒரு கத்துக்குட்டி முஸ்லிம் பெயருள்ள ரிப்போர்ட்டர் அரைவேக்காட்டுத் தனமா, இங்க்லீஷ்ல தப்புத் தப்பா முழங்கிகிட்டு இருந்தான். அவ்வப்போது ப்ரேக்கிங் நியூஸ்னு எழுத்துக்கள் ஃபோர்க்ரவுண்டுல பளிச்சிட்டன.

“தமிழகக் காவல்துறை பல மாதங்களா வாச் பண்ணி, கள்ள நோட அடிக்கற ஒரு பயங்கர சதிகாரக் கும்பல சிவகாசியில் அதிரடிச் சோதனை நடத்திப் பிடித்ததாக நமக்குத் தகவல் கிடைச்சிருக்கு. இதுல சில மும்பை நிழல் உலக தாதாக்கள் சம்பந்தப்படிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு சில பீஹார் ஆட்களும், சில தமிழ் நாட்டு இஸ்லாமியத் தீவிரவாத-பயங்கரவாதக் குழுக்களும் உதவி இருக்கலாம் என அதிகார வட்டாரங்கள் சொல்கின்றன. மேலும் …”

எனக்குச் சிரிப்பு வந்தது.

‘ஆடறது குரங்கு, ரசிக்கிற ஏமாளிக்குப் பின்னால பாக்கட் அடிக்கறவன் ரெடி, தட்டுல விழற துட்டு குரங்காட்டிக்கு!  ஆடின குரங்கு பெரும்பாலும் பட்டினி இல்லன்னா வெறும் பட்டாணி. அட வெண்ணைகளா!’ என்று சொல்லி உரக்கச் சிரித்தேன்.

பாஸ் சொன்னது போல லீவெல்லாம் போடாம, வேலையில மூழ்கினேன்.

வந்த உடனே பெஜவாடா மஹாபாவி ரெட்டியை ஆந்திராவுல குண்டக்கல் பக்கத்துல ஒரு கொக்கரக்கோ டைபான ஜக்காளச்செருவுங்க்ற ரெட்டை வண்டி ஊருக்கு இன்வெஸ்டிகேட பண்ணற அஸைன்மென்டுக்கு ஏற்பாடு பண்ணினேன். அவன் கிளம்பினான். சத்தம் போடாம அடுத்த நாள் வனிதா விடுதலை ஆக வெலைகள் நடந்தது. வெளியே வந்து 2-ஆவது நிமிஷம் ஒரு பப்ளிக் பூத்லேந்து ஃபோன் பண்ணினா.

“என்னை விடுவிச்சதுக்கு நன்றி!”

“வனி…உன் பேரு என்னன்னு எனக்குத் தெரியாது… நம்ம அஃபேர் ஓவர்! ஓகே?”

“உனக்குத் தெரிஞ்ச பெயர் ஒண்ணைச் சொல்லறேன். ஐ ஐ ஜி யூ! என்னோட நிஜமான பேரு … சிவபுண்ணியம். கோட் நேம் – அமேலியா லூயிஸ்,” என்று ஆரம்பித்தாள்.

நான் பதில் பேசவில்லை.

“உங்க நாட்டுக்குப் பெரிய ஆபத்து காத்துகிட்டு இருக்கு. நா சேர்ந்திருக்கற க்ரூப் பயங்கர ஏவுகணைகளோட உங்க விமான நிலையங்கள அட்டாக் பண்ணப்போறாங்க. சொல்லற தகவலகளக் குறிச்சுக்க…”

கடகடவென்று சொல்ல ஆரம்பித்தாள்.

நான் குறிப்பெடுக்கத் தேவையே இல்லை. எல்லா கால்ஸும் ரெக்கார்டெட். ஆனால், எடுப்பது போல நடிக்க இரண்டு முறை இடைமறித்தேன். அவள் சொன்னது எனது இரத்தத்தை உறையச் செய்தது. மூன்றாவது முறையாக இடை மறித்து, ரிப்பீட் செய்யச் சொன்னபோது, அவள் குறிக்கிட்டாள்.

“ரொம்ப நடிக்காத. கால ஈஸியா ட்ரேஸ் பண்ணிடலாம். உன்னோட கால்ஸ் எல்லாமே ரெக்கார்டெட். ஆனா நா…”

காரின் ப்ரேக்குகள் க்ரீச்சிடும் ஓசை கேட்டது.

எனக்குப் பழக்கமான ஏ கே 47 ரகத் துப்பாக்கிகள் சுடப்படும் ஓசை என் காதில் தனியாவர்த்தனமாகக் கேட்டது.

“நீ எனக்குப் ப்ராமிஸ் பண்ணினத மறக்காதே…”

அவை தான் வனிதா சொன்ன கடைசி வார்த்தைகள்.

அவளைக் கொன்றவர்களின் வண்டி கிளம்பி மறையும் சவுண்ட் கேட்டது.

அங்கே எத்தனை அப்பாவிகள் இறந்தனரோ!

ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.

ஆனால், என்னோட ட்ரெயினிங் காரணமா நான் செயலில் இறங்கி, நாட்டைக் காக்க, நாச வேலைகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டேன். நேரம் கடத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழக்கக்கூடிய அபாயம் என்னை மிரட்டியது.

-தொடரும்

அறிவிப்பு 1

நான் எழுதும் க்ரைம் நாவல் “உளவுகாத்த கிளி” யின் 8 அத்தியாயங்கள் இது வரை பிரசுரமாகி உள்ளன.

அவற்றின் அத்தியாயங்களை ஏராளமானோர் படித்துள்ளார்கள். படித்த அனைவருமே, “மிகவும் புதுமையாக, ரசிக்கும்படியாக உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிண்டி உள்ளது,” என்று கூறி உள்ளார்கள்.

சிலர், ஆரம்பம் முதல் கோர்வையாக ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்க விரும்புகிறோம், எனக் கூறி உள்ளனர்.

அந்த வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே அவற்றை அளிக்கிறேன்.

http://wp.me/P7bYkZ-F4

http://wp.me/P7bYkZ-Fj

http://wp.me/P7bYkZ-Fu

http://wp.me/P7bYkZ-Gt

http://wp.me/P7bYkZ-Hv

http://wp.me/p7bYkZ-IU

http://wp.me/p7bYkZ-JU

http://wp.me/p7bYkZ-Ka

கதையின் அனைத்து அத்தியாயங்களும் தயார்.

அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

சில நாட்கள் முன்பு 2 விபத்துக்களால், காலில் 3 எலும்பு முறிவுகள், வீக்கம், வலி, ஜுரம் இத்யாதி…

ஆகையால் 8-ஆவது அத்தியாயம் பிரசுரமாவதில் கொஞ்சம் தாமதம்.

சிலர் தொடர்ந்து மேற்படி புதினத்தை புத்தகமாக வெளியிடலமே என்று கூறுகிறார்கள்.

புத்தகத்தை வாங்க விரும்புவோர், எனக்குத் தகவல் தெரிவிக்கவும். எனது id:  haritsv@hotmail.com

அறிவிப்பு 2

நான் ஏற்கனவே எழுதிய மஹாபாரதம் தொலைக்காட்சித் தொடரின் வசனங்கள் [1320 பக்கங்கள், விலை ரூ.1000] சென்னையில் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு உள்ளது. விலாசம்: தீன தயாளு தெரு [பெரிய தபால் நிலையம் அருகில்] தியாகராய நகர், சென்னை 600 017.

வானதி பதிப்பகத்தின் தொலை பேசி எண்: [044] 24342810. தொடர்புக்கு திரு. ராமு, உரிமையாளர்.

இதற்கு முன்பு ஒரு சில வாசகர்கள், வானதி அலுவலகத்தில் வந்து புத்தகத்தைப் வாங்கிச் செல்கையில், என் ஆட்டோகிராஃப் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். சிலர் அவ்வாறு பெற்றும் சென்றார்கள்.

அவ்வாறு இனி எனது ஆட்டோகிராஃபுடன் மஹாபாரதம் புத்தகத்தைப் பெற விரும்புவோர், எனக்கு ஈமெயில் அனுப்பலாம். நிச்சயமாக, நேரம் குறித்து, வானதி அலுவலகத்திற்கு வந்து கையொப்பமிட்டுத் தருகிறேன்.

அறிவிப்பு 3

“மஹாகவி பாரதியின் மரணம், ஒரு ஃப்ளாஷ்பேக்” என்ற நிஜமான சம்பவத்தை ஒரு கதை போல எழுதி உள்ளேன்.

அதன் லிங்க்: http://wp.me/p7bYkZ-Dj

நன்றி!

தி சு வெ ஹரி [எ] துக்ளக் வெங்கட்

 

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

4 thoughts on “உளவுகாத்தகிளி – 8”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s