உளவுகாத்தகிளி – 7

My international Tamil spy thriller’s next chapter is given below.

Advertisements

Please click here for accessing earlier chapters.

பிப்ரவரி 13 2009

காலை 8-10க்கு என்னைச் சந்திக்க வேண்டிய ஆள் ரயில் நிலையத்தில் நுழைந்தான். தலைமீது சுழலும் சிகப்பு விளக்கு மாட்டாத குறையாக, ஒரு அமெச்சூர் ஒற்றன் செய்யும் அத்தனைத் தவறுகளையும் செய்தான்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆள், ரேமண்ட்ஸ் ரக கறுப்பு நிறத்தில் கால் குழாய்களையும், அதே கலரில் க்ரொகொடைல் டீ ஷர்டும் அணிந்திருந்தான். சற்றே வழுக்கை விழுந்த உருண்டைத் தலை. முகத்தில் முடியே இல்லை.

மணி 8-30யைத் தாண்டியவுடன் டென்ஷன் ஆனான். மணிக்கட்டில் கட்டியிருந்த சீனாவில் தயாரித்த டூப்ளிகேட் டிஸ்ஸோ கடிகாரத்தை அடிக்கடிப் பார்த்தான். பெருமூச்சுக்களை விட ஆரம்பித்தான்.அவனிடமிருந்து சுமார் 10-15 அடி தூரத்தில் நின்று அவனை மானசீகமாக ஸ்கேன் செய்தேன். ஒற்றன் பணிக்குப் புதிதாக வந்த கத்துக்குட்டி என்பது தெளிவாகத் தெரிந்த்து. எனது சகாக்களுள் ஒருவரிடம் விசேஷ ஸ்கேனர் இருந்தது. அதன் உதவியுடன் அவனிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை அறிந்தோம்.

9-10க்கு கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்து நடை பாலம் மீது ஏற அவன் எத்தனித்தபோது அவனைக் கேஷுவலாக அணுகினேன்.

“மிஸ்டர் வ்யாக்ரபாத ரெட்டி?”

திடீரென நான் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான் போலும்.

“ஓம்…அவனு!”

சந்தேகமே இல்லை, இவனுக்குத் தெலுங்கின் “தெ” கூடத் தெரியாது.

“நேனு விக்ரம் ராவ். ஏமி மெஸேஜு?”

“யூ கெனாட் பீ விக்ரம் ராவ். ஹி இஸ் சப்போஸ்டு டு பீ…”

“நீங்கள் யாழ்ப்பணத்தவர் என்டு விளங்கிற்று. உங்க மெஸேஜ் என்னவெண்டுமெண்டு கதைத்தால், வடிவாகச் செயலில் இறங்கலாம், என்ன?” என்றேன். எனது வார்த்தைகள் சிலருக்குக் காமேடியாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு அது சிம்ம சொப்பனம்.

 “உங்களை எனக்கு அடையாளமே தெரிய இல்ல. கன நேரமா என்ட பக்கத்துல தான்…”

“வை டோண்ட் வி மூவ் ஸம்வேர் எல்ஸ்?”

வெறிடம் செல்லும் எண்ணத்தை வெளிப்படுத்திய நான், அவனது விடைக்குக் காத்திராமல், நடக்கலானேன்.

ரயிலடிக்கு வெளியே ஒரு டீக்கடையில், தம்மைப் பற்றவைத்து, அவன் சொல்வதைக் கேட்டேன்.

“வனிதா எங்கட இயக்கத்தைச் சேர்ந்தவர்,” என்று ஆரம்பித்தான்.

ஒரு சிறு தவறினால் அவள் சிறை செல்லவேண்டியதாயிற்று என்றான். இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கள் பாகிஸ்தானில் தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டு இங்கு வினியோகம் ஆகிறது என்றான். அதில் அவனது இயக்கத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பதையும், அவர்களது விலாசங்கள் தன்னிடமிருப்பதையும் கூறினான். நான் புருவங்களை நெரித்தேன். அதே கும்பல், சிவகாசியில் இந்திய ரூபாய் நோட்டுக்களை விட மிகவும் கைதேர்ந்த முறையில் அமெரிக்க டாலர்களை அடித்து வினியோக்கிறார்கள் என்றான். பின்னர் சிக்கிக்கொள்வது போலப் பாசாங்கு செய்து இந்தியாவின் பெயரை ரிப்பேர் ஆக்க இலங்கைத் தமிழர்களையும், அவர்களுடன் சில இந்தியர்களையும் சிக்க வைக்கும் திட்டம், பாகிஸ்தானின் ராணுவத் தலமைபீடமான ராவல்பிண்டியில் தீட்டப்பட்ட விவரங்களை உமிழ்ந்தான். சிவகாசி அச்சகத்தின் விலாசத்தையும் கொடுத்தான். புலிகளைக் “கர்ணல்” கருணா மொத்தமாகக் காட்டிக் கொடுத்ததால், தமிழீழ சுதந்திரப் போருக்குப் பின்னடைவு ஏற்பட்டது, என்றான். பிரபாகரன் தப்பித்துச் சென்றுவிட்ட உண்மையை இலங்கைப் போர் தளபதி சரத் ஃபோன்ஸெக்காவெ ஜனவரி 18 2009 அன்று கொழும்பில் உளரிவிட்டதாகச் சொன்னான். விரைவில் அவர் பெரும் சிக்கலில் மாட்டவிருப்பதாக ஆரூடமும் வேறு தெரியப்படுத்தினான்.

பத்து நிமிடங்களுள் இவனிடம் இனி ஒரு குந்துமணி அளவு முக்கியத் தகவலும் எஞ்சி இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

“வனிதாங்கற யார்கிட்டேர்ந்தோ ஸின்ஹான்னு யாருக்கோ ஒரு மேஸேஜ் இருக்கறதா உங்க ஆள் ஒருத்தன் சொன்னானே…”

“அதை வனிதா தான் விளக்க இயலும். அதுக்காக, அவங்களை நீங்கள் நினைத்தால் வடிவா விடுவிக்க இயலும் எண்டு எனக்குத் தகவல் அனுப்பினவர். ஆனபடியால்…அவரை விடுதலை செய்ய…”

இவனிடம் பேசிப்பயனில்லை என உணர்ந்த நான், அருகிலிருந்த கடையிலிருந்து சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லி நகர்ந்தேன். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவனை எனது சகாக்கள் குண்டுகட்டாக – தயார் நிலையில் இருந்த கவச வண்டியில் தூக்கிப்போட்டுச் சென்று விட்டார்கள். அந்த நிகழ்வுக் கோர்வைக்கு சரியாக இரண்டரை செக்கண்டுகள் தான் பிடித்தன. பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.

எதுவுமே நடவாதது போல சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்து, ஒரு ஆட்டோவில் ஏறினேன்.

திருப்பதியில் இந்த ஆப்பரேஷனுக்காகவே ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்.

அங்கு செல்கையில் எவரும் என்னைப் பின் தொடராத வண்ணம் திடீரென நான் பயணித்த வண்டி நகர்ந்தவுடன் ஒரு சிறு ட்ராஃபிக் ஜாமை எனது வேறு சில சகாக்கள் உருவாக்கினர்.

எங்கோ இந்தச் சம்பவங்களில் ஒரு அழுகிய மீன் வாடை அடிப்பதை உணர்ந்தேன். ஆனால் அதன் சூட்சுமத்தை என்னால் அப்போதைக்கு கணிக்க இயலவில்லை.

எனக்கேற்படவிருந்த அடுத்த அதிர்ச்சிக்கு நானே திருப்பதியில் சில நிமிடங்களுக்குப் பின்னர் வழி வகுத்தேன் என்பதை நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

-தொடரும்

எனது நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்புக்கள்:

நான் எழுதும் க்ரைம் நாவல் “உளவுகாத்த கிளி” யின் 5 அத்தியாயங்கள் இது வரை பிரசுரமாகி உள்ளன.

அதனை இது வரை சில நூறு நண்பர்கள் படித்துள்ளார்கள். படித்த அனைவருமே, “மிகவும் புதுமையாக, ரசிக்கும்படியாக உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிண்டி உள்ளது,” என்று கூறி உள்ளார்கள்.

நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க, அதன் 5 அத்தியாயங்களின் லிங்கை இங்கே தருகிறேன்: http://wp.me/P7bYkZ-Hv

கதையின் அனைத்து அத்தியாயங்களும் தயார்.

அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

சிலர் அதைப் புத்தகமாக வெளியிடலமே என்றார்கள்.

புத்தகத்தை வாங்க விரும்புவோர், எனக்குத் தகவல் தெரிவிக்கவும். எனது id:  haritsv@hotmail.com

நான் ஏற்கனவே எழுதிய மஹாபாரதம் தொலைக்காட்சித் தொடரின் வசனங்கள் [1320 பக்கங்கள், விலை ரூ.1000] சென்னையில் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு உள்ளது. விலாசம்: தீன தயாளு தெரு [பெரிய தபால் நிலையம் அருகில்] தியாகராய நகர், சென்னை 600 017.

தொலை பேசி எண்: [044] 24342810. தொடர்புக்கு திரு. ராமு, உரிமையாளர்.

“மஹாகவி பாரதியின் மரணம், ஒரு ஃப்ளாஷ்பேக்” என்ற நிஜமான சம்பவத்தை ஒரு கதை போல எழுதி உள்ளேன்.

அதன் லிங்க்: http://wp.me/p7bYkZ-Dj

இதற்கு முன்பு ஒரு சில வாசகர்கள், வானதி அலுவலகத்தில் வந்து புத்தகத்தைப் வாங்கிச் செல்கையில், என் ஆட்டோகிராஃப் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். சிலர் அவ்வாறு பெற்றும் சென்றார்கள்.

அவ்வாறு இனி எனது ஆட்டோகிராஃபுடன் மஹாபாரதம் புத்தகத்தைப் பெற விரும்புவோர், எனக்கு ஈமெயில் அனுப்பலாம். நிச்சயமாக, நேரம் குறித்து, வானதி அலுவலகத்திற்கு வந்து கையொப்பமிட்டுத் தருகிறேன்.

நன்றி!

தி சு வெ ஹரி [எ] துக்ளக் வெங்கட்

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “உளவுகாத்தகிளி – 7”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s